சித்தா படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு

சித்தா படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியீடு

சித்தார்த் நடிப்பில் உருவாகி வரும் ‘சித்தா’ படத்தின் டீசர் நாளை மறுநாள் மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய S.U.அருண் குமார் இயக்கத்தில், சித்தார்த் நடிக்கும் திரைப்படம் ‘சித்தா’. பின்னணி இசையை விஷால் சந்திரசேகரும், படத்திற்கான பாடல்களை திபு நிணன் தாமஸும் அமைத்துள்ளனர். அண்மையில் இப்படத்தில் இருந்து வெளியான ‘கண்கள் ஏதோ’ என்ற முதல் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது.

இந்நிலையில், படத்தின் டீசர் நாளை மறுநாள் வெளியாகும் என படக்குழு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சித்தப்பா மகள் உறவை பேசும் சித்தா திரைப்படம் வரும் செப்டம்பர் 28-ம் தேதி திரைக்கு வருகிறது.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *