பட்ஜெட் தாக்கலின் போது தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருவதாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் டெல்லியில் இன்று போரட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1 ம் தேதி தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு திட்டமிட்டே புறக்கணிக்கப்பட்டிருப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி இருந்தார். இதைத் தொடர்ந்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று கருப்புச்சட்டை அணிந்து டெல்லியில் போராட்டம் நடத்த உள்ளனர். நாடாளுமன்ற வளாகத்தின் அருகிலுள்ள காந்தி சிலை முன்பு திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.