பாஜகவுடன் எப்போதும் கூட்டணி இல்லை

அண்ணாமலையின் அப்பனே வந்தாலும், ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது என முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை காந்தி மியூசியத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தேர்தல் அறிக்கை குழு நாளை மதுரை மண்டலம் வருகிறது. இதுவரை ஆறு மண்டலங்களில் மக்கள் தங்கள் கோரிக்கைகளைத் தெரிவித்துள்ளனர். மக்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. நத்தம் விஸ்வநாதன் தலைமையில் நாளை மதுரை வரும் தேர்தல் அறிக்கை குழுவிடம் பொதுமக்கள், தொழிலதிபர்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவரும் தங்கள் கோரிக்கைகளை தெரிவிக்கலாம் என்று குறிப்பிட்டார். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக அளித்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் மக்களின் நம்பிக்கை சிதறடிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கோரிக்கை வழங்கும் தொழிற்சங்கங்களுக்கு ஆளும் அரசு மூலமாக நெருக்கடி வழங்கப்பட்டு வருகிறது எனத் தெரிவித்தார். பாஜகவோடு கூட்டணி இல்லை என்பதில் அதிமுக திட்டவட்டமாக இருப்பதாக  தெரிவித்த உதயகுமார் மிகப்பெரிய பொறுப்பிலிருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் மூளை குழம்பித் திரிவதாகக் குறிப்பிட்டார்.  

கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாத அண்ணாமலை நாட்டையே காப்பாற்றப் போவது போல பேசுவது லேகியம் விற்பதைப் போல உள்ளது. அண்ணாமலையின் அப்பனே வந்தாலும், ஆண்டவனே வந்தாலும் அதிமுகவை அழிக்க முடியாது. அதிமுக இல்லை என்றால் தமிழ்நாட்டில் அரசியலே இல்லை. அனைத்து இன மக்களுக்கும் மதங்களுக்கும் அதிமுக பாதுகாப்பாக உள்ளது என முன்னாள் அமைச்சர் உதயகுமார் குறிப்பிட்டார். அண்ணாமலையை அவன் இவன் என்பதோடு பல வார்த்தைகளையும் குறிப்பிட்டு திட்டினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *