சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை அசோக் நகரில் நோய் தடுப்பு பணிகளை சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீடுகளில் கழிவுகளை சேகரிக்க 5 பயோ மெட்ரிக் பை வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை 300 டன் மாஸ்க், பிபிஇ கிட் உள்ளிட்ட மருத்துவ கழிவுகளை 1500°சி வெப்பத்தில் எரிக்கப்பட்டிருக்கிறது. சென்னையில் கொரோனா பாதிப்பு குறைய ஊரடங்கு தான் காரணம் என்றார்.
அதிகளவில் பரிசோதனை செய்து தொற்று உறுதியானவர்களுக்கு திறம்பட சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கொரோனா பாதிப்பு குறைவதை காரணமாக வைத்து நோய் தடுப்பு பணிகள் நிறுத்தப்படாது. தொடர்ந்து இதே வேகத்தில் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். சென்னையில் 80% மக்கள் முககவசம் அணிகின்றனர். சென்னையில் உள்ள 89 சந்தைகளும் அதிகாரிகள் மூலம் கண்காணிக்கப்படுகின்றனர். சென்னையில் அடுத்த 5 மாதங்களுக்கு கொரோனா தடுப்பு பணிகள் தொடரும் எனவும் கூறினார்.
வங்கிகளில் தேவையற்ற சேவைகளை இரண்டு மாதங்களுக்கு நிறுத்தி வைக்க உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் 44 ஆயிரம் களப்பணியாளர்கள் இருக்கிறார்கள். அதில் 375 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டு 128 பேர் குணமடைந்திக்கிறார்கள். தூய்மை பணியாளர்கள் மாஸ்க், க்ளோவ்ஸ் இல்லாமல் வரும் மாநகராட்சி ஊழியர்களுக்கு ஒரு நாள் ஊதியம் பிடிக்கப்படும். இறந்த தூய்மை பணியாளர்களுக்கு இழப்பீடு தொகை வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் அவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என பிரகாஷ் கூறினார்.