Monday, October 5, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home அரசியல்

நாளை இடைத்தேர்தல்; 605 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரம்; பள்ளிகளுக்கு விடுமுறை!

Seithialai desk by Seithialai desk
October 5, 2026 10:40 AM GMT+5:30

சென்னை: தமிழ்நாட்டின் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெறுகிறது. ஐந்துமுனைப் போட்டி நிலவும் இரு தொகுதிகளிலும் காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

வாக்குப்பதிவுக்குத் தேவையான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பும் பணி இன்று நடைபெறுகிறது. தேர்தல் பணியாளர்களும் அந்தந்த வாக்குச்சாவடிகளுக்குச் செல்கின்றனர்.

‘நான்கே மாதங்களில் ரீல் அறுந்து விட்டதே!’ விஜய்க்கு ஸ்டாலின் 4 கேள்விகள்!

ஒரு தொகுதி… மூன்று கட்சிகளின் கௌரவப் போர்!

இன்று தாராபுரத்தில் விஜய் பரப்புரை!

605 வாக்குச்சாவடிகள்

மதுராந்தகம் தனித் தொகுதியில் 285 வாக்குச்சாவடிகளும், தாராபுரம் தனித் தொகுதியில் 320 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன. இரு தொகுதிகளிலும் சேர்த்து 605 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

மதுராந்தகத்தில் சுமார் 2.13 லட்சம் வாக்காளர்களும், தாராபுரத்தில் 2.23 லட்சம் வாக்காளர்களும் உள்ளனர். ஏறத்தாழ 4.37 லட்சம் வாக்காளர்கள் இடைத்தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

வாக்காளர்கள் தங்களுடைய பெயர் மற்றும் வாக்குச்சாவடி அமைவிடத்தை வாக்காளர் சேவை இணையதளத்தில் முன்கூட்டியே சரிபார்த்துக்கொள்ளலாம்.

49 வேட்பாளர்கள் களத்தில்

இரு தொகுதிகளிலும் பிரதான கட்சிகள் மற்றும் சுயேச்சைகள் உட்பட மொத்தம் 49 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். மதுராந்தகத்தில் 27 பேரும், தாராபுரத்தில் 22 பேரும் களத்தில் உள்ளனர்.

பிரதான அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மோதுவதால், இரு தொகுதிகளிலும் ஐந்துமுனைப் போட்டி நிலவுகிறது.

மதுராந்தகத்தில் மோதும் வேட்பாளர்கள்

மதுராந்தகம் தொகுதியில் ஆளும் தவெக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.மரகதம் குமரவேல் போட்டியிடுகிறார். திமுக சார்பில் ஐ.பரந்தாமன், அதிமுக சார்பில் எஸ்.கனிதா சம்பத், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பி.சுகந்தி மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் ஜி.ஜானகிராமன் ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகக் களத்தில் உள்ளனர்.

மதுராந்தகத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைச் செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தாராபுரத்திலும் ஐந்துமுனைப் போட்டி

தாராபுரம் தொகுதியில் தவெக சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.சத்தியபாமா, திமுக சார்பில் எஸ்.சுகன்யா, அதிமுக சார்பில் கே.பானுமதி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் லட்சுமணன் மற்றும் நாம் தமிழர் கட்சி சார்பில் எம்.கார்த்திகா ஆகியோர் முக்கிய வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர்.

தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் இடதுசாரிக் கட்சிகள், இந்த இடைத்தேர்தலில் தனித்துப் போட்டியிடுவது அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது.

34 தற்காலிகச் சோதனைச்சாவடிகள்

தாராபுரம் தொகுதியில் வாகனச் சோதனை மற்றும் கண்காணிப்புக்காக 34 தற்காலிகச் சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு 18 வாக்குச்சாவடிகள் பதற்றமானவையாகக் கண்டறியப்பட்டுள்ளதால், கூடுதல் காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இரு தொகுதிகளிலும் பதற்றமான வாக்குச்சாவடிகளில் கூடுதல் காவலர்கள் மற்றும் தேர்தல் கண்காணிப்பாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிக்கப்படுவதைத் தடுக்கப் பறக்கும் படைகள், நிலையான கண்காணிப்புக் குழுக்கள் மற்றும் வாகனச் சோதனைக் குழுக்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன.

பிரசாரம் ஓய்ந்தது – பள்ளிகளுக்கு விடுமுறை

இரு தொகுதிகளிலும் நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் பிரசாரம் நிறைவடைந்தது. தொகுதிகளுக்கு வெளியிலிருந்து பிரசாரத்துக்காக வந்த அரசியல் கட்சி நிர்வாகிகள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.

பொதுக்கூட்டம், ஊர்வலம் மற்றும் வாக்காளர்களைப் பாதிக்கும் வகையிலான தேர்தல் விளம்பரங்களுக்குத் தடை அமலில் உள்ளது. வாக்குச்சாவடியிலிருந்து 100 மீட்டருக்கு வெளியே மட்டுமே கட்சிகளின் உதவி மையங்களை அமைக்க வேண்டும். ஒரு மையத்தில் அதிகபட்சம் இரண்டு பேர் மட்டுமே இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வேட்பாளர்கள் அல்லது அவர்களின் முகவர்கள் வாக்காளர்களை வாகனங்களில் வாக்குச்சாவடிக்கு அழைத்துச் செல்லக் கூடாது என்றும் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது. இரண்டு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு மையங்களாகச் செயல்படும் பள்ளிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் 9ல் வாக்கு எண்ணிக்கை

நாளை மாலை வாக்குப்பதிவு நிறைவடைந்ததும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச் செல்லப்படும். அக்டோபர் 9ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தேர்தல் தொடர்பான புகார்களை மாவட்டத் தேர்தல் கட்டுப்பாட்டு அறையின் 1800 425 0045 என்ற கட்டணமில்லா எண்ணிலும், வாக்காளர் உதவிக்கு 1950 என்ற எண்ணிலும் தெரிவிக்கலாம். தேர்தல் நடத்தை விதிமீறல்களை ‘cVIGIL’ செயலி மூலமாகவும் புகாரளிக்கலாம்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

இன்றைய ராசிபலன்: யாருக்குக் காத்திருக்கிறது நல்ல செய்தி?

Next Post

‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்குத் தடை கோரி வழக்கு; இன்று விசாரணை!

Next Post

‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்குத் தடை கோரி வழக்கு; இன்று விசாரணை!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

பெண் பத்திரிகையாளர்கள் புகார்: டெல்லியில் மீண்டும் போராட்டம்; 17 பேர் கைது!

October 5, 2026 2:31 PM GMT+5:30

‘வெற்றிப் பயணம்’ திட்டத்துக்குத் தடை கோரி வழக்கு; இன்று விசாரணை!

October 5, 2026 11:26 AM GMT+5:30

நாளை இடைத்தேர்தல்; 605 வாக்குச்சாவடிகளில் பாதுகாப்பு தீவிரம்; பள்ளிகளுக்கு விடுமுறை!

October 5, 2026 10:40 AM GMT+5:30

இன்றைய ராசிபலன்: யாருக்குக் காத்திருக்கிறது நல்ல செய்தி?

October 5, 2026 8:27 AM GMT+5:30

மூன்று தங்கம்; இந்திய ஹாக்கியின் சாதனை நாயகன் மன்பிரீத்!

October 4, 2026 6:58 PM GMT+5:30

897 ஓய்வூதியக் குறைகளுக்கு நாளை ஒரே மேடையில் தீர்வு!

October 4, 2026 6:45 PM GMT+5:30
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version