முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் நன்றி!!!

முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு  ஸ்டாலின் நன்றி!!!
புதிய கல்விக்கொள்கை சார்பாக முதல்வரின் அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இருமொழிக்கொள்கை மட்டுமே பின்பற்றப்படும் என்றும்; புதிய கல்விக்கொள்கையில் மத்திய அரசு மும்மொழிக்கொள்கையை கொண்டு வந்துள்ளது வேதனையை அளிக்கிறது என்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தன் அறிக்கையின் வாயிலாக மத்திய அரசுக்கு தன் கண்டனத்தை தெரிவித்து இருந்தார்.முதல்வரின் இந்த அறிக்கைக்கு எதிர்க்கட்சி தலைவர் தன் ட்விட்டரில் நன்றி தெரிவித்துள்ளார். ஸ்டாலின் தன் ட்விட்டர் பதிவில்.

NEP2020 பெயரால் வரும் மும்மொழித்திட்டத்தை எதிர்த்துள்ள @CMOTamilNaduவுக்கு நன்றி!

மொழிக்கொள்கை மட்டுமல்ல- கல்விக் கொள்கையே பல தவறுகளுடன் கல்வி உரிமையைப் பறிப்பது என திமுக கூட்டணித் தலைவர்கள் கடிதம் எழுதியுள்ளோம். அதன் அடிப்படையிலும் முதல்வர் எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும்! என குறிப்பிட்டிருந்தார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *