மாநகரத்தில் வென்று கைதி ஆன பின் இயக்குனர் போட்ட மாஸ்டர் பிளான் ?

மாநகரத்தில் வென்று கைதி  ஆன பின் இயக்குனர் போட்ட மாஸ்டர்  பிளான் ?
மாநகரம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் இயக்குனர் லோகேஷ் கனகராஜ்  இதன் பின்பு அவர் எடுத்த கைதி படம்  மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டது  தற்போது அவர்மூன்றாவதாக தளபதி விஜய்  படத்தை இயக்கி முடித்திருக்கிறார்

விரைவில் திரைக்கு வர இருக்கும் விஜய் நடிப்பில் லோகேஷ் இயக்கிய ‘மாஸ்டர்’ திரைப்படம். இந்த திரைப்படம் வெளியானால் லோகேஷ் கனகராஜ் கோலிவுட்டில் முன்னணி இயக்குனர் பட்டியலில் தனக்கென ஒரு தனி இடம் பிடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்

இந்த நிலையில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் அடுத்த திரைப்படம் என்ன? என்ற பரபரப்பான எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் கமலஹாசன் தயாரிக்கும் புதிய படத்தை அவர் இயக்குவார் என எதிர்பார்த்த நிலையில்  தற்போது வந்துள்ள புதிய தகவலின்படி அவர்  தெலுங்கில் முன்னணியாக இருக்கும் ஒரு நடிகரின் படத்தை இயக்கப்போவதாக ஒரு செய்தி சுற்றிவருகிறது 

 அதை  பிரபல தெலுங்கு தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும்  என்று தகவல் 

 இது குறித்த அதிகாரப் பூர்வமான அறிவிப்பு   கூடியவிரைவில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கிறார்கள். மேலும் தமிழ், மற்றும்தெலுங்கு ஆகியஇருமொழிகளிலும் இந்த படம் உருவாக அதிக வாய்ப்பு உள்ளதாக  சொல்லப்படுகிறது .

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *