இன்றைய ராசிபலன் 06.02.2021!!!

இன்றைய ராசிபலன் 06.02.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று சனிக்கிழமை தேதி 06.02.2021, நல்ல நேரம் :காலை 7.30-8.30, மாலை 4.30-5.30, ராகுகாலம் காலை 9.00-10.30, எமகண்டம் காலை 1.30-3.00, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

உங்கள் ராசிக்கு இன்று சந்திராஷ்டமம் என்பதால் எந்த செயலையும் நிதானத்துடன் செய்வது நல்லது. மற்றவர்களிடம் பேசும் போது கவனமாக பேச வேண்டும். வாகனங்களில் செல்லும் பொழுது நிதானமாக செல்வது நல்லது.

ரிஷபம் :

உங்களுக்கு பொருளாதாரம் சிறப்பாக இருக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆன்மீக காரியங்களில் ஈடுபடுவதன் மூலம் மன அமைதி கிடைக்கும். உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல நேரிடும்.

மிதுனம்

உறவினர்கள் வழியாக சுபசெய்திகள் வந்து சேரும். அரசு துறை ஊழியர்களுக்கு அவர்கள் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு லாபகரமான பலன்கள் கிட்டும். போட்டி பொறாமைகள் குறையும். சேமிப்பு உயரும்.

கடகம் :

குடும்பத்தில் வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படலாம். நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகளுக்கு உடனிருப்பவர்களே தடையாக இருப்பார்கள். சிலருக்கு பொன் பொருள் வாங்கும் யோகம் உண்டு. உத்தியோகத்தில் உள்ள போட்டி பொறாமைகள் குறையும்.

சிம்மம் :

இன்று உங்களுக்கு பணிச்சுமை காரணமாக அலைச்சல், சோர்வு உண்டாகலாம். தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள சற்று சிரமபட வேண்டியிருக்கும். புதிய தொழில் தொடங்கும் முயற்சிகளில் சற்று சிந்தித்து செயல்பட்டால் சாதகமான பலனை அடையலாம்.

கன்னி :

குடும்பத்தில் திடீர் என்று நல்ல செய்தி ஏற்பட்டு சுபச்செலவுகள் செய்ய நேரிடும். தொழில் தொடர்பான நவீன கருவிகள் வாங்கும் முயற்சிகள் நற்பலனை தரும். உத்தியோகத்தில் இதுவரை இருந்த எதிர்ப்புகள் குறைந்து மன அமைதி உண்டாகும்.

துலாம் :

குடும்பத்தில் ஒற்றுமை குறையும் சூழ்நிலை உருவாகும். எதிர்பாராத செலவுகளை சமாளிக்க கடன் வாங்க நேரிடும். தொழில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் சிறுசிறு மாறுதல்களை செய்து லாபத்தை அடைவீர்கள். கொடுக்கல் வாங்கல் சாதகமாக இருக்கும்.

விருச்சிகம் :

குடும்பத்தில் பிள்ளைகளால் மனநிம்மதி குறைந்து தேவையில்லாத பிரச்சினைகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் ஓரளவு இருக்கும். உத்தியோகத்தில் இருக்கும் நெருக்கடிகள் சற்று குறையும். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது.

தனுசு :

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சிகள் நடைபெறும். பிள்ளைகள் ஆதரவாக இருப்பார்கள். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்கள் ஒற்றுமையாக செயல்படுவார்கள். வெளியூர் பயணங்களால் நற்பலன்கள் கிடைக்கும்.

Read more – ஒப்போ A15s ஸ்மார்ட்போனின் 4GB + 128GB மாடல் அறிமுகம்..!!

மகரம் :

உத்தியோகத்தில் சுலபமான காரியங்கள் கூட காலதாமதமாகும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பூர்வீக சொத்துக்கள் வழியில் அலைச்சலுக்கேற்ப அனுகூலமான பலன் கிடைக்கும். நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும்.

கும்பம் :

புதிய மனிதர்களின் ஆதரவால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். புதிய பொருட் சேர்க்கை உண்டாகும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய வாய்ப்புகள் அமையும். வெளியிலிருந்து வரவேண்டிய தொகை கைக்கு வந்தடையும்.

மீனம் :

நீங்கள் செய்யும் செயல்களில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து காணப்படும். உத்தியோகத்தில் வேலைபளு அதிகரித்தாலும் மனம் நிம்மதியடையும். நண்பர்களின் உதவியால் வியாபார ரீதியான பிரச்சினைகள் குறையும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *