இன்றைய ராசிபலன் 28.01.2021!!!

இன்றைய ராசிபலன் 28.01.2021!!!

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்..

இன்று வியாழன் கிழமை தேதி 28.01.2021, நல்ல நேரம் :காலை 10.30-11.30, நண்பகல் 11.30-12.00,
ராகுகாலம் மாலை 1.30-3.00, எமகண்டம் காலை 6.00-7.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம் :

குடும்பத்தில் உள்ளவர்களுடன் சிறுசிறு மனஸ்தாபங்கள் இருக்கும். உத்தியோகத்தில் எதிர்பாராத பிரச்சினைகள் டென்ஷனை உண்டாகும். வேலையாட்களை அனுசரித்து சென்றால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காணமுடியும்.

ரிஷபம் :

பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நண்பர்களின் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை தரும். வியாபாரத்தில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். திருமண சம்பந்தமான முயற்சிகள் நற்பலனை கொடுக்கும். கடன் பிரச்சினை தீரும்.

மிதுனம் :

புதிய பொருட்கள் வாங்குவதில் கவனம் வேண்டும். உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்ல பலனைக் கொடுக்கும். சுபகாரிய முயற்சிகளில் அனுகூலப் பலன்கள் கிடைக்கும். வராத கடன்கள் வசூலாகி மகிழ்ச்சியை அளிக்கும்.

கடகம் :

எடுத்த காரியங்களில் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள். உறவினர்கள் வழியாக நல்ல செய்திகள் வந்து கூடும். தொழில் வளர்ச்சிக்காக மேற்கொள்ளும் முயற்சிகளில் அனுகூலப் பலன் கொடுக்கும். தெய்வ வழிபாடு மன நிம்மதியை பெறக்கூடும்.

சிம்மம் :

குடும்பத்தில் அமைதி கூடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். ஆடம்பர பொருட்களால் சேமிப்பு நீங்கும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளை அனுசரித்து சென்றால் முன்னேற்றம் உண்டாகும். நண்பர்கள் உதவியாக இருப்பார்கள்.

கன்னி :

வியாபாரத்தில் பொருளாதார ரீதியாக வளர்ச்சி அடைவதற்கான வாய்ப்புகள் இருக்கும். உடன் பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

துலாம் :

வீட்டு தேவைகள் பூர்த்தி அடையும். காலதாமதமாக முடிய கூடிய காரியங்கள் கூட எளிதில் தீரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் விலகும். சிலருக்கு உத்தியோக ரீதியாக வெளியூர் பயணம் செல்ல கூடும்.

விருச்சிகம்

உங்களின் ராசிக்கு இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைய எதிலும் பொறுமையுடன் இருப்பது நல்ல பலனைக் கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க உணவு விஷயத்தில் கவனம் வேண்டும். உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை சற்று குறையும். வியாபார ரீதியான கொடுக்கல் வாங்கல் சிறப்பாக அவையும்.

தனுசு :

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனக்குழப்பத்துடனும், கவலையுடனும் காணப்படும்.வெளியூர் பயணங்களை தவிர்ப்பது நல்லது. அலுவலகத்தில் மேலதிகாரிகளுடன் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் வீண் பிரச்சினைகளை தவிர்க்க முடியும் .

மகரம் :

மாணவர்கள் படிப்பில் ஆர்வத்துடன் ஈடுபடுவார்கள். குடும்பத்தில் சிக்கனமுடன் செயல்படுவதால் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலையில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். வங்கி சேமிப்பு கூடும்.

Read more – கேரள எல்லையில் தீப்பற்றி எரிந்த கிணற்று நீர் : அதிர்ந்த வீட்டின் உரிமையாளர்

கும்பம் :

நீங்கள் எந்த காரியத்தையும் உற்சாகத்தோடு செய்து முடிப்பீர்கள். சிலருக்கு வேலை விஷயமாக வெளியூர் செல்லும் வாய்ப்புகள் அமையும். தொழில் கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு எதிர்பார்த்த லாபத்தை அடையலாம்.

மீனம் :

குடும்பத்தில் ஒற்றுமை குறைந்து இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் தோன்றி மறைய கூடும். உத்தியோகத்தில் உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதன் மூலம் வேலைபளு நீங்கும். நண்பர்கள் உதவியால் கடன்கள் தொல்லை தீரும்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *