’ஆடிப்பூரம்’ இன்று எல்லா ராசிக்காரர்களும் இத செய்யுங்க

’ஆடிப்பூரம்’ இன்று எல்லா ராசிக்காரர்களும் இத செய்யுங்க

01.08.2022

ஆடிப்பூரம்:

ஆடி மாதத்தில் வரக்கூடிய பூரம் நட்சத்திரத்தில் ஆண்டாள் பிறந்ததாக கருதப்படுகிறது.இந்த நாளில் வைணவ திருத்தலங்களில் ஆண்டாளுக்கு சிறப்பு பூசைகள், வழிபாடுகள் நடைபெறும். இன்று திருமணமாகாத பெண்கள், ஆண்டாளை வழிபட்டு வர மனதிற்கு பிடித்தமான வரன் அமையும். திருமணமும் விரைவில் கைகூடும் என்பது நம்பிக்கை. மேலும், அம்மன் அவதரித்த நாளாகவும் இந்த நாள் கொண்டாடப்படுகிறது. எனவே, அனைத்து ராசிக்காரர்களும் இன்று அம்மனை வழிபட்டு வர நன்மை உண்டாகும்.

Andal Nachiyar, Aadi Pooram- திருப்பாவை பாடி திருமாலை மணந்து கொண்ட  ஆண்டாளின் பக்தி சிறப்புகள்... - alvars andal nachiyar married with  srirangam ranganatha and significance of thiruppavai ...

இன்றைய ராசி பலன்கள்:

மேஷம்: வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. செலவு செய்யும் முன் யோசியுங்கள். பணிகளை விரைந்து முடிப்பீர்கள்.

ரிஷபம்: உங்களது செயல்திறன் அதிகரிக்கும். பணியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

மிதுனம்: உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுடன் வெளியே செல்வீர்கள். அன்பு அதிகரிக்கும்.

கடகம்: தனிமையில் இருப்பதை போன்ற உணர்வு ஏற்படலாம். இதை தவிர்க்க அருகில் உள்ள சிவாலயத்திற்கு சென்று வாருங்கள்.

சிம்மம்: உறுதியான முடிவுகளை எடுப்பீர்கள். உடல் நலத்தில் முன்னேற்றம் ஏற்படும்.

கன்னி: பணபரிவர்த்தனை அதிகரிக்கும். வேலைகளை திறம்பட செய்வீர்கள்.

துலாம்:குடும்பத்துடன் வெளியில் சுற்றுலா செல்லும் சந்தர்ப்பம் உருவாகும். கோயிலுக்கு செல்ல மனம் விரும்பும்.

விருச்சிகம்:உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள். ஜங் புட் சாப்பிடுவதை தவிருங்கள்.

தனுசு: முயற்சி வெற்றிபெறும். ஒரு செயலை ஒன்றிற்கு இரண்டு முறை யோசித்து செய்வது நல்லது.

மகரம்: உடல் பிணிகள் நீங்கும். வருமானத்தை அதிகரிக்க முயற்சி செய்வீர்கள்.

கும்பம்:சுற்றுலா செல்லும் வாய்ப்பு ஏற்படலாம். குடும்பத்துடன் மகிழ்ச்சியாக செலவழிப்பீர்கள்.

மீனம்: பெரியவர்களின் ஆசி கிடைக்கும். வாழ்க்கைத் துணை உங்களின் தொழில் முயற்சிக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

-பா.பரசுராமன்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *