இன்றைய ராசிபலன் 08.11.2020

இன்றைய ராசிபலன் 08.11.2020

இன்று ஞாயிற்றுக்கிழமை தேதி 08.11.2020, ராகுகாலம் காலை 4.30-6.00, எமகண்டம் மதியம் 12.00-1.30, இன்றைய ராசிபலனை பார்க்கலாம்.

மேஷம்

எதிர்ப்புகளைத் தாண்டிமுன்னேறுவீர்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படலாம். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வீட்டை விரிவுபடுத்துவது குறித்துயோசிப்பீர்கள். வியாபாரத்தில் புது பங்குதாரரைசேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் நிம்மதி கிடைக்கும் நாள். பழைய நினைவுகளில் மூழ்கும் நாள்.

ரிஷபம்

குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். சொந்த-பந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசால் அனுகூலம் கிடைக்கும். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள்.

மிதுனம்

கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். கேட்டஇடத்தில் உதவிகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய முயற்சிகள் வெற்றிகிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுக் கிட்டும். தேவைகள் பூர்த்தியாகும் நாள்.

கடகம்

ராசிக்குள் சந்திரன் இருப்பதால் கொஞ்சம் அலைச்சலும் சிறுசிறு ஏமாற்றமும் வந்து போகும்.நெருக்கமானவர்களிடம் உங்களின் மனக்குறைகளை சொல்லி ஆதங்கப்படுவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களால் விரயம் வரும். உத்தியோகத்தில் சக ஊழியர்களுடன் கவனமாக பழகுங்கள். பொறுமைத் தேவைப்படும் நாள்

சிம்மம்

குடும்பத்தினருடன் வீண்விவாதம் வந்து போகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிப்பது அவ்வளவு நல்லது அல்ல. செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களிடம் மனஸ்தாபம் வந்து போகும். வியாபாரத்தில் புது முதலீடு செய்வீர்கள். உத்தியோகத்தில் மறைமுக பிரச்சினைகள் வரக்கூடும். போராடி வெல்லும் நாள்.

கன்னி

குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும் நாள். எதார்த்தமாக பேசி கவர்வீர்கள்.பூர்வீக சொத்துப் பிரச்சினை ஒன்று தீரும். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரையை கேட்டு நடப்பது நல்லது. நல்லன நடக்கும் நாள்

துலாம்

தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். உடன் பிறந்தவர்களால் பயனடைவீர்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய்வீர்கள். கல்யாண முயற்சிகள் கூடிவரும். வியாபாரத்தில் மாறுபட்ட அணுகுமுறையால் லாபத்தை அடைவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். புகழ் கௌரவம் கூடும் நாள்.

விருச்சிகம்

குடும்பத்தில் உள்ளவர்களின் ஆதரவு கிடைக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். உறவினர்கள் உங்களை மதிப்பார்கள். புதிய சிந்தனைகள் தோன்றும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் நெளிவு சுளிவுகளை கற்றுக் கொள்வீர்கள். அலுவலகத்தில் மரியாதைக் கூடும். உற்சாகமான நாள்.

தனுசு

சந்திராஷ்டமம் இருப்பதால் நினைத்த வேகத்தில் சில வேலைகளை முடிக்க முடியாமல் தடை தாமதங்கள் ஏற்படலாம். நண்பர்கள் உறவினர்கள் உங்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்வார்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளுடன் அளவாக பழகுங்கள். நேர்மறை எண்ணங்கள் தேவைப்படும் நாள்.

மகரம்

பிரச்சினைகளின் ஆணிவேரை கண்டறிவீர்கள். சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும் நாள். வாகனத்தை சரி செய்வீர்கள். புது வேலை அமையும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். புதிய நம்பிக்கை துளிர்விடும்நாள்.

கும்பம்

குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். புது வாய்ப்புகள் உங்களை தேடி வரும். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்தியோகத்தில் சிலநுணுக் கங்களை கற்றுக் கொள்வீர்கள். மதிப்புக் கூடும் நாள்.

மீனம்

குடும்ப வருமானத்தை உயர்த்த புது முயற்சி மேற்கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் கெட்டவர் என்பதைகண்டறிவீர்கள். அக்கம் பக்கம்வீட்டாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவீர்கள். உத்தியோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உங்களுக்கு உதவுவார்கள். கனவு நனவாகும் நாள்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *