பல்சர் 200 என்எஸ் பைக் விலையில் புதிய மாற்றம்..தற்போதைய சந்தை விலை விவரம்?

பல்சர் 200 என்எஸ் பைக் விலையில் புதிய மாற்றம்..தற்போதைய சந்தை விலை விவரம்?

பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் பல்சர் 200 என்எஸ் பைக்கின் விலை, இந்தியாவில் மூன்றாவது முறையாக மாற்றம் செய்யப்பட்ட்டுள்ளது.

பஜாஜ் நிறுவனத்தின் வெற்றிகரமான சீரிஸ்களில் ஒன்றான பல்சர் மாடலில், பிஎஸ்6 பல்சர் 200 என்எஸ் வேரியண்ட் பைக் கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த மாடலில் 199.5சிசி, 4 வால்வ், லிக்விட் கூல்டு என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 24.2 பிஹெச்பி பவர், 18.5 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

வாடிக்கையாளர்களின் நல்ல வரவேற்பை பெற்ற இந்த பைக், ரூ. 1.25 லட்சம், எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டது
தொடர்ந்து, மே மாதத்தில் இதன் விலை 3 ஆயிரம் ரூபாய், ஜூலை மாதத்தில் ஆயிரம் ரூபாய் என இரண்டு முறை இதன் விலை உயர்த்தப்பட்டது. இதற்கான காரணம் முறையாக அறிவிக்கப்படாவிட்டாலும்,
உதிரிபாகங்கள் விலை உயர்வே விலை மாற்றத்திற்கான காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் தனது பல்சர் 200 என்எஸ் மாடல் விலையை சத்தமின்றி 3வது முறையாக உயர்த்தி உள்ளது. அந்த வகையில், பல்சர் 200 என்எஸ் மாடல் விலை ரூ. 1.31 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி இருக்கிறது. இம்முறை இதன் விலை ரூ. 2,219 வரை உயர்த்தப்பட்டு உள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *