எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹெக்டர் பிளஸ் மாடலின் அனைத்து வேரியன்ட்களின் விலையிலும் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டர் மாடல் ஸ்டைல், சூப்பர், ஸ்மார்ட் மற்றும் ஷார்ப் என நான்கு வேரியண்ட்களில் சந்தையில் கிடைக்கப் பெறுகிறது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புதிய அறிவிப்பின்படி, எம்ஜி ஹெக்டர் பிளஸ் மாடலின் டீசல் வேரியண்ட்களில் ரூ. 5 ஆயிரம் முதல் ரூ. 45 ஆயிரம் வரையிலும், பெட்ரோல் வேரியன்ட்களில் 24 ஆயிரம் ரூபாய் வரையிலும் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.
விலை உயர்வின் படி ஹெக்டர் பிளஸ் புதிய விலை ரூ. 13.74 லட்சம், எக்ஸ் ஷோரூம் என மாறி உள்ளது. இது முந்தைய விலையை விட ரூ. 25 ஆயிரம் அதிகம் ஆகும். இதன் டாப் எண்ட் மாடல் விலை ரூ. 18.69 லட்சம், எக்ஸ் ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
எம்ஜி ஹெக்டர் பிளஸ் மாடல் ஸ்டேரி ஸ்கை புளூ, கேன்டி வைட், கிளேஸ் ரெட், ஸ்டேரி பிளாக், பர்கன்டி ரெட் மற்றும் அரோரா சில்வர் என ஆறுவித நிறங்களில் கிடைக்கிறது. இந்த மாடல் 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், ஹைப்ரிட் மோட்டார் கொண்ட 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின், 2.0 லிட்டர் டீசல் என 3 வகைகளில் கிடைக்கிறது.
இந்திய சந்தையில் புதிய எம்ஜி ஹெக்டார் பிளஸ் மாடல் மஹிந்திரா xuv500, டொயோட்டா இன்னோவா க்ரிஸா மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கபடுகிறது.