கூடுதல் அம்சங்கள்..ஹீரோ பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்..

கூடுதல் அம்சங்கள்..ஹீரோ   பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர்..

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் ஸ்கூட்டர், இந்திய சந்தையில்
அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் பிளெஷர் பிளஸ் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் ஏற்கனவே இந்திய சந்தையில் கிடைத்து வருகிறது. தற்போது அதன், மேம்படுத்தப்பட்ட மாடலாக பிளாட்டினம் எடிசன் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

புதிய ஸ்கூட்டர் மாடலில் பல்வேறு வெளிப்புற தோற்ற அமைப்புகளில் மாற்றம், புது அம்சங்கள் மற்றும் உபகரணங்களுடன் கிடைக்கிறது. கூடுதலாக பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் மாடல் புதிய மேட் பிளாக் நிறத்தில் கிடைக்கிறது. இதன் உள்புற பேனல்களுக்கு பிரவுன் நிறம் வடிவமைக்கப்பட்டு உள்ளது.

புதிய ஸ்பெஷல் எடிஷன் மாடல் விலை ரூ. 60,950, எக்ஸ்-ஷோரூம் என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

பிளெஷர் பிளஸ் ஸ்பெஷல் எடிஷன் மாடல் கண்ணாடிகள், மப்ளர் ப்ரோடெக்டர்கள் மற்றும் ஹேண்டிள்பார் எண்ட்கள் வழங்கப்பட்டு உள்ளன. வெளிப்புற தோற்ற அமைப்புகளை தவிர இந்த மாடலில் வேறு எந்த மெக்கானிக்கல் மாற்றமும் மேற்கொள்ளப்படவில்லை.

ஹீரோ பிளெஷர் பிளஸ் பிளாட்டினம் எடிஷனில் 110சிசி  பிஎஸ்6 ரக பியூவல் இன்ஜெக்ட் செய்யப்பட்ட என்ஜின் வழங்கப்பட்டு உள்ளது. இது 8 பிஹெச்பி பவர், 8.7 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *