ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரேட்டா வேரியண்ட்.. வெளியீட்டு விவரங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரேட்டா வேரியண்ட்.. வெளியீட்டு விவரங்கள்

ஹூண்டாய் நிறுவனத்தின் புதிய கிரேட்டா வேரியண்ட்டின், வெளியீடு தொடர்பான சில தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆண்டு இறுதியில் வாகன விற்பனையை ஊக்குவிக்க ஆட்டோமொபைல் நிறுவனங்கள் பல்வேறு சலுகைகளை அளித்து வரும் சூழலில், சில நிறுவனங்கள் அடுத்த ஆண்டு வெளியிட உள்ள புதிய மாடல் வாகனங்களுக்கான பட்டியலை தயார் செய்து வருகின்றன.

அந்த வரிசையில், ஹூண்டாய் நிறுவனம் தனது கிரேட்டா மாடலின் புது வேரியண்ட்டை உருவாக்கி வருகிறது. இந்த வேரியண்ட் கொரியாவில் சோதனை செய்யப்படுவதாக, ஏற்கனவே பல்வேறு புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி இருந்தன.

இந்நிலையில், ஹூண்டாய் நிறுவனம் 7 பேர் பயணிக்கும் புதிய கிரேட்டா வேரியண்ட்டை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டின் இரண்டாவது அரையாண்டு காலக்கட்டத்தில் புதிய கிரேட்டா வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு, ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய கிரேட்டா தற்போதைய மாடலை விட நீளமாகவும், நீண்ட வீல்பேஸ் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக மூன்றாம் கட்ட இருக்கைகளை வழங்க வேண்டும் என்பதால் இந்த மாற்றம் நிச்சயம் மேற்கொள்ளப்படலாம்.

புதிய ஹூண்டாய் கிரேட்டா மாடல், இந்திய சந்தையில்
இரண்டாம் தலைமுறை எக்ஸ்யுவி500 மற்றும் விரைவில் அறிமுகமாக இருக்கும் டாடா கிராவிடாஸ் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும் என கூறப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *