இந்தியாவில் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்.. சிறப்பு அம்சங்கள் வெளியீடு

இந்தியாவில் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார்.. சிறப்பு அம்சங்கள் வெளியீடு
மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் வாகனமான இக்யூசி மாடலின் விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.

வாடிக்கையாளர்களுக்கு சொகுசு கார்களை வழங்குவதில் முன்னணியில் உள்ள மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம், இக்யூசி எனும் பெயரில் தனது முதல் எலெக்ட்ரிக் வாகனத்தை விரைவில் இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ளது. நவம்பர் மாதம் இந்திய சந்தைக்கு வரும் என கூறப்படும் இந்த மாடலின் விலை, 75 லட்சம் முதல் 80 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஜிஎல்சி கிராஸ்ஓவர் மாடலை தழுவி உருவாக்க்கப்பட்டுள்ள புதிய இக்யூசி மாடலில், 400 4மேடிக், 2 எலெக்ட்ரிக் மோட்டார்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவை 400 பிஹெச்பி பவர், 760 என்எம் டார்க் செயல்திறன் கொண்டுள்ளது. இது மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 5.1 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த கார் ஒருமுறை சார்ஜ் செய்தால் அதிகபட்சம் 471 கிலோமீட்டர் வரை செல்லும் என தயாரிப்பு நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது. மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடல் 7.4 கிலோவாட் ஹோம் எலெக்ட்ரிக் கனெக்ஷன், 7.4 கிலோவாட் ஏசி வால் பாக்ஸ் மற்றும் 110 கிலோவாட் டிசி ஃபாஸ்ட் சார்ஜர் என மூன்றுவித வெவேறு விதங்களில் கிடைக்கிறது.

மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூசி மாடலில் மல்டி-பீம் எல்இடி ஹெட்லேம்ப்கள், எல்இடி டெயில் லைட்கள், புதிய அலாய் வீல்கள், ஏசி வென்ட்கள், டூயல் ஸ்கிரீன் சிஸ்டம் போன்ற அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *