நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் காரின் முன்பதிவு மற்றும் வெளியீட்டு விவரங்கள்

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் காரின் முன்பதிவு மற்றும்  வெளியீட்டு விவரங்கள்

நிசான் நிறுவனத்தின் புதிய மேக்னைட் மாடல் காரின் முன்பதிவு மற்றும் விலை விவரங்கள் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

நிசான் மேக்னைட் மாடல் இந்தியாவில் மொத்தம் எட்டு வண்ணங்களில் சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. வெளிப்புறம் எல்இடி முகப்பு விளக்குகள், பாக் லைட்கள், டூயல் டோன் அலாய் வீல்கள், வீல் ஆர்ச்கள், பெரிய கிரில், குரோம் இன்சர்ட்கள், சில்வர் ரூப் ரெயில்கள் மற்றும் இருபுறங்களில் ஸ்கிட் பிளேட்கள் ஆகியவையும் வழங்கப்படுகின்றன.

இந்நிலையில், தனது புதிய மேக்னைட் மாடல் விலையை அடுத்த மாதம் அறிவிப்பதாக நிசான் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் இந்த காருக்கான முன்பதிவு விரைவில் தொடங்கி, நவம்பர் மாதத்தில் விநியோகம் தொடங்கும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த காரின் உள்புறம் 8 அங்குல தொடுதிரை வசதி கொண்ட இன்போடெயின்மென்ட் ஸ்கிரீன், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, ஆண்ட்ராய்டு ஆட்டோ, நிசான் கனெக்ட், வயர்லெஸ் சார்ஜிங், குரூயிஸ் கண்ட்ரோல், என்ஜின் ஸ்டார்ட் – ஸ்டாப் பட்டன், ஸ்டீரிங் மவுண்ட் கண்ட்ரோல் போன்ற அதிநவீன அம்சங்கள் வழங்கப்படுகின்றன.

என்ஜின் செயல்திறன் அறிவிக்கப்படாத நிலையில், புதிய நிசான் மேக்னைட் மாடலில் 1.0 லிட்டர் 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இத்துடன் எக்ஸ்டிரானிக் சிவிடி ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *