போயிங் விமான பாகங்களை தயாரிக்கவிருக்கும் சேலம் நிறுவனம்!!

போயிங் விமான பாகங்களை தயாரிக்கவிருக்கும் சேலம் நிறுவனம்!!

தமிழ்நாட்டில் இருந்து போயிங் விமான நிறுவனத்திற்கு முக்கிய பாகங்களை தயாரித்து வழங்குதல் தொடர்பான ஒப்பந்தம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.

முதல் முறையாக போயிங் விமானத்துக்கு முக்கிய பாகங்கள் தயாரித்து வழங்க தமிழக நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. சேலம் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்துடன் போயிங் இந்தியா நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

விண்வெளி நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கான முக்கிய விமான பாகங்களை ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. சேலத்தில் உள்ள உற்பத்தி கூடத்தையும் 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் விரிவு படுத்துகிறது ஏரோஸ்பேஸ் நிறுவனம். நீண்ட காலத்திற்கு முக்கிய விமான பாகங்களை சேலம் ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது.

மேலும் இந்த நிகழ்ச்சியில் ஊரக தொழில்துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *