டாடா நிறுவனம் வெளியிட்ட விழாக்கால சலுகை.. ரூ.65 ஆயிரம் வரை தள்ளுபடி

டாடா நிறுவனம் வெளியிட்ட விழாக்கால சலுகை.. ரூ.65 ஆயிரம் வரை தள்ளுபடி

டாடா நிறுவன கார் மாடல்களுக்கு 65 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான, பல்வேறு சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்களும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், வாடிக்கையாளர்களை கவர பல்வேறு அசத்தலான சலுகை மற்றும் தள்ளுபடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றன.

அந்த வகையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம்
பண்டிகை காலத்தை முன்னிட்டு டியாகோ, டிகோர், நெக்சான் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களுக்கு சலுகைகளை அறிவித்துள்ளது.

குறிப்பிடப்பட்ட கார் மாடல்களுக்கு அதிகபட்சம் ரூ. 65 ஆயிரம் மதிப்புள்ள சலுகைகள் வழங்கப்படுகின்றன. இதில் விற்பனை விலையில் தள்ளுபடி, எக்சேன்ஜ் போனஸ் மற்றும் பல்வேறு இதர சலுகைகள் அடங்கும். இந்த சலுகைகள் மாடல் மற்றும் வேரியணட்டிற்கு ஏற்ப வேறுபடுவது குறிப்பிடத்தக்கது.

இந்த விழாக்கால சலுகை, நவம்பர் 1 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 30 வரை வழங்கப்படுகிறது. அறிவிப்பின்படி, டியாகோ மாடலுக்கு ரூ. 25 ஆயிரம் வரையிலான சலுகையும், டிகோர் மாடலுக்கு ரூ. 30 ஆயிரம் மற்றும் நெக்சான் மாடலுக்கு ரூ. 15 ஆயிரம் மதிப்புள்ள சலுகை வழங்கப்படுகிறது.

இதுதவிர டாடா ஹேரியர் மாடலுக்கு ரூ. 65 ஆயிரம் வரையிலான சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. டாடா அல்ட்ரோஸ் மாடலுக்கு பண்டிகை காலத்தில் எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *