ஒரே மாதத்தில் ரூ.75 விலையேறியது கேஸ் சிலிண்டர்

ஒரே மாதத்தில் ரூ.75 விலையேறியது கேஸ் சிலிண்டர்

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை ஒரே மாதத்தில் இரண்டு முறை அதிகரித்து இருப்பது இல்லத்தரசிகளை கவலை அடையச் செய்து இருக்கிறது.

சமையல் கேஸ் சிலிண்டரின் விலை தற்போது ரூ.50 அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரே மாதத்தில் ரூ.75 அதிகரித்து தற்போது சிலிண்டரின் விலை ரூ.785ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.  முன்னதாக, கடந்த ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி வீட்டு உபயோக சிலிண்டர் ஒன்றின் விலை 734 ரூபாயாக இருந்தது. பின்னர் சிலிண்டரின் விலை 734 லிருந்து 881 ரூபாயாக உயர்ந்தது. அடுத்து வந்த மாதங்களில் இறங்குமுகத்தில் காணப்பட்ட சிலிண்டர் விலை, மே மாதத்தில் இந்த ஆண்டின் குறைந்து ஒரு சிலிண்டரின் விலை 569 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது. சென்ற செப்டம்பரில் சிலிண்டர் ஒன்றின் விலை 610 ரூபாயாகவும், டிசம்பர் மாதம் 660 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு  தொடங்கி பிப்ரவரி 4ம் தேதி ரூ.25 அதிகரித்து ரூ.735ஆக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ரூ.50 அதிகரித்துள்ளது.  பெட்ரோல், டீசல், சமையல் எண்ணெய், வெங்காயம் வரிசையில் கேஸ் விலை உயர்ந்து வருவதால் பொதுமக்கள் கவலை தெரிவித்துள்ளனர்

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *