செய்தி அலை சிறுகதைப் போட்டி– 118 ஒரு கொலை ஒரு முடிவு-ஶ்ரீதர் கோபால் “நாளீக்கு குடியரசு நாளு.. அந்தாளு மேல முட்டையை அடிக்க வேண்டியது உம்பொறுப்பு” ரிட்டயரான …
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 115 ஒரு துண்டு ரயில்-நெய்வேலி பாரதிக்குமார் 1940 ஆம் வருடம் இடைச்சிவிளை புகைவண்டி நிலையம் இசக்கிமுத்து கொடி அசைக்க காத்திருந்தார். அதுதான் அந்த புகைவண்டி நிலையத்துக்கு வரும் கடைசி ரயில். ஒருவேளை அந்த புகைவண்டி நிலையத்துக்கே அன்று கடைசி தினமாகவும் இருக்கலாம். இனி ஓடுமா இல்லையோ என்பதால் கடைசி முறையாக அதில் பயணம் செய்துவிடுவோம் என்பதற்காகவும் வேடிக்கைப் பார்ப்பதற்காகவும் மக்கள் வழக்கத்தைவிட அதிகமாக நிலையத்தில் கூடி இருந்தனர். சீருடை உடுப்பை ஒருமுறை தொட்டுப் பார்த்துக் கொண்டார். இனி அதை அணிய வாய்ப்பு இருக்குமா? அப்பா பார்க்கும் வைத்தியத்தொழில்தான் இனி நமக்கா? நிலையத்திலிருந்து 300 மீட்டர் தொலைவில் வண்டி வருவது தெரிந்தது. நிலையத்துக்கு வர இன்னும் பத்து நிமிடங்கள் ஆகும். மாட்டு வண்டி வேகத்தில்தான் வரும் என்றாலும் அதன் அழகும் கம்பீரமும் தனிதான். மதராஸ்பட்டினத்தில் இருக்கும் பாரி கம்பெனிக்காரன்தான் திசையன்விளையில் இருந்து குலசை வரைக்கும் ரயில் விட்டான். இல்லை என்றால் இந்த ஊருக்கு எப்படி ரயில் வரும்? திசையன்விளை பனை மரத்து பதநீர் அவ்வளவு தித்திப்பா இருக்கும். அதிலேர்ந்து …
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 114 உண்மையை இழந்த நிம்மதி-வளர்மதி ராமசாமி சாந்தியும் மாரியும் காதல் திருமணம் செய்து கொண்டனர், சாந்தி உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவள் மாரி தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர் அதனால் இவர்கள் குடும்பம் இவர்களை ஏற்றுக்கொள்ளவில்லை. அதனால் குடும்பத்தை விட்டு பிறந்த ஊரை விட்டு நகரத்திற்கு குடிபெயர்ந்து வந்துவிட்டனர். இப்பொழுது மாரி கடைவீதியில் செருப்புத் தைக்கும் கடை ஒன்று வைத்திருக்கிறார், இவர்களுக்கு கண்மணி என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது, அவள் தான் இவர்களுக்கு உலகம். கண்மணியை நன்றாகப் படிக்க வைக்க வேண்டும் உயர்ந்த பதவிக்கு கண்மணி செல்ல வேண்டும் இதுதான் மாரியின் ஆசை. அதற்காக இரவு பகல் பாராமல் உழைத்தான் அடிக்கடி கண்மணியிடம் நாம் உயர்ந்த பதவிக்கு சென்றால்தான் நமக்கு கிடைக்க வேண்டிய மரியாதை கிடைக்கும் அதற்கு நீ நன்றாக படிக்க வேண்டும் என்று சொல்லிக் …
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 113 எந்நாடு என்றாலும்-வசந்தா கோவிந்தராஜன் நந்திதா படுக்கையறை சன்னல் வழியாக அரை மணிநேரமாக சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவ்வப்போது தெருக்கோடியில் நுழையும் வாகனங்களுக்கிடையே தன் மகளின் சைக்கிள் தென்படுகிறதா என்று கண்களால் துழாவிச் சலித்துப் போனாள். பள்ளிக்கு மொபைல் எடுத்துக் கொண்டு போகக் கூடாது என்பதால் அவளை அழைக்க முடியவில்லை. மகள் ஆத்விகாவுக்கு ஐந்து வயசாகும் போது அமெரிக்கா சிலிக்கான் valley ல் உள்ள Sanjose ல் குடியேறினார்கள். இங்கே வந்த புதிதில் அழுக்கு இல்லை, வியர்வை இல்லை, கரண்ட் கட் இல்லை, தண்ணீர்ப் பிரச்சனை இல்லை என்பதே நிம்மதியாக இருந்தது. அத்துடன் நேர்த்தியான வீடுகள், பூத்துக்குலுங்கும் மலர்கள், வழுக்கும் சாலைகள் எனப் பார்த்த காட்சிகள் ஏதோ புது உலகத்துக்குள் நுழைந்த உற்சாகம் அளித்தது. பத்து வருடங்களில் இது சாதாரணமாகி விட்டது. வந்த கொஞ்ச நாளிலேயே நந்திதா கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மூன்று …
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 112 பாலைவன பறவைகள்-தனுஜா ப்பா …எப்ப வருவீங்க? என்ற மழலை குரலுக்கு… இன்னும் பத்தே நாள்..அப்பா சம்யா குட்டியோட இருப்பேனாம்..பாப்பாக்கு என்ன வேணும் சொல்லுங்க ? அப்பா வரும் போது வாங்கிட்டு வரேன்.. பிங்க் ..கலர்..டெடிபியர்.. ம்ம்…அப்புறம் சாக்லேட்…பார்பி டால்..அப்பா அந்த வேதா இருக்காளே அவ எனக்கு அந்த பிங்க் பொம்மையை தரமாட்டாளாம். அவ பர்த்டேக்கு அவங்க அப்பா வாங்கி தந்ததாம்.. சரிடா ..கண்ணு..அப்பா வரும்போது உனக்கும் நிறையா பொம்மை வாங்கிட்டு …
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 111 நான் செய்த கொலைக்கான வாக்குமூலம்-பரிசுத்த ஆவி சிறு குழந்தைகளும், இதயம் பலவீனமானவர்களும், கர்ப்பமான பெண்களும், இதை படிப்பதை தவிர்க்க கூடாது,,,,,அப்புறம் உங்க விருப்பம்,,, இது என் வாழ்க்கையில் நடந்த…
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 110 வல்லமை தாராயோ-லீலா ராமசாமி அந்தச் சிறார் கூர்நோக்கு இல்லத்தின் தூய்மையான நீண்ட வராண்டாவில் காலணிகள் சீராக சப்திக்க மிடுக்காக நடந்து…
செய்தி அலை சிறுகதைப் போட்டி– 109 (ஏ)மாற்றங்கள்-த. ஜோதிகா வாழ்க்கை பயணம் அழகான அதிகாலை நேரம் சூரியன் அவரது வேலை சரியாக செய்து பறந்து விரிந்த வனத்தை தன் செங்கதிர்களால் வெட்கத்தில் சிவக்க செய்து கொண்டு இருந்தான் அந்த அதிகாலையில் மிகவும் பரபரப்பாக வெளியில் செல்ல கிளம்பி கொண்டு இருந்தான் ஆதித்யன். ஆதித்தியன் சென்னையில் உள்ள ஒரு பிரபல மென்பொருள் நிறுவனத்தில் மேலாளராக பணி புரிகின்றான். ஆதி பாக்குறதுக்கு எப்படி இருப்பான் தெரியுமா..ஆறடி உயரம் கலைந்த கேசம் அழுத்தமான நெற்றி உடற்பயிற்சி செய்த கட்டுமான உடல் அதிக கோபம் குணம் கொண்டவன். பெண்களை மதிக்கும் தன்மை கொண்டவன். சென்னையிலுள்ள பரபரப்பு இருக்கே ஈடுகொடுக்கும் அளவிற்கு பரபரப்புடன் வெளியில் கிளம்பி கொண்டிருந்தான்.(எங்க போறான்🤔🤔🤔). ‘வாழ்க்கை நாடகமா என் பொறப்பு பொய் கணக்கா தினந் தோரும் வெறும் கனவா. ஏன் விதியை எழுதையிலே அந்த சாமியும் உறங்கியதே ‘என்று …