மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில் ‘சூர்யா’

மத்திய அரசின் அதிகாரப்பூர்வ பக்கத்தில்  ‘சூர்யா’

68வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில், 2020ம் ஆண்டிற்கான சிறந்த படமாக ’சூரரைப்போற்று’ திரைப்படம் 5 தேசிய விருதுகளை வென்றது. இப்படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யாவிற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது.

சூர்யாவின் பிறந்த நாளான இன்று ரசிகர்களை அதை கொண்டாடி வரும் நிலையில், மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இதை பகிர்ந்துள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சியடைந்து இதை அதிகமாக பகிர்ந்து வருகின்றனர்.

நடிகர் கமல்ஹாசன் தேசிய விருது வென்ற தமிழ் திரைப்படங்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ள வாழ்த்து செய்தியில், “சூரரைப் போற்று திரைப்படம் 5 தேசிய விருதுகளைக் குவித்துள்ளது பெருமையளிக்கிறது. சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா என ஒட்டுமொத்தமாக 10 விருதுகளை அள்ளி தேசத்தை திரும்பிப் பார்க்கச் செய்துள்ளது தமிழ்த் திரையுலகம். விருதாளர்கள் அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்” என குறிப்பிட்டுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *