ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருது வழங்கப்பட்டது!!

ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருது வழங்கப்பட்டது!!


ஒத்த செருப்பு திரைப்படத்திற்கு 2 தேசிய விருது வழங்கப்பட்டது.

டெல்லி, டெல்லியில் 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இதில், குடியரசு துணைத்தலைவர் வேங்கையா நாயுடு, மத்திய தகவல்தொழில்நுட்பதுறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் பங்கேற்றுள்ளனர். சிறப்பு தேசிய விருதுக்கான பிரிவில் பார்த்திபன் இயக்கத்திலும் நடிப்பிலும் வெளியான “ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7” என்ற திரைப்படம் தேர்வானது.

இதனை தவிர படத்தின் சிறந்த ஒலிகலவைக்கும் படத்தின் இசையமைப்பாளர் ரசூல் பூக்குட்டியும் தேசிய விருதுக்கு தேர்வானார்.இந்நிலையில், இன்று புதுடெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் இயக்குனர் பார்த்திபன் மற்றும் இசையமைப்பாளர் ரசூல் பூக்குட்டி இருவரும் “ஒத்த செருப்பு சைஸ் நம்பர் 7” படத்திற்கான தேசிய விருதை குடியரசு துணைத்தலைவர் வெங்கையாநாயுடுவிடம் இருந்து பெற்று கொண்டனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *