பிக் பாஸ் புகழ் ஆரவ் திருமணம் : விவரங்கள்

பிக் பாஸ் புகழ் ஆரவ் திருமணம் : விவரங்கள்
பிக் பாஸ் வெற்றியாளர் மற்றும் நடிகர் ஆரவிற்கு இந்த நடிகையுடன் செப்டம்பர் மாதம் 6ஆம் தேதி சென்னையில் திருமணம் நடைபெறுகிறது

பிரபல தொலைக்காட்சி தொடர் பிக் பாஸ் முதல் சீசனில் வெற்றி பெற்றவர் ஆரவ். அவருக்கும் அதில் பங்குபெற்ற நடிகை ஓவியாவிற்கும் காதல் ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிந்தவுடன் இருவரும் ஊர் சுற்றுவதைக் காண முடிந்தது. வெளி நாட்டில் அவர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளிவந்தன. எனினும் ஆரவ் தனக்கு நண்பர் மட்டுமே என்றும் திருமணத்தில் தனக்கு நம்பிக்கை என்றும் ஓவியா தெரிவித்தார். இதன்பின் அவ்விருவரும் பிரிந்தனர் என்று நம்பப்படுகிறது

இந்நிலையில் ஆரவிற்கு புதுமுக நடிகை ராஹீ என்பவருடன் திருமணம் நடக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ராஹீ கவுதம் மேனனின் அடுத்த படமான ஜோஷ்வா இமை போல் காக்க படத்தில் நடிகையாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தக்கது இவர்களுக்கு செப்டம்பர் 6ஆம் தேதி சென்னையில் இருக்கும் பெரிய உணவகம் ஒன்றில் திருமணம் என்று கூறப்படுகிறது

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *