Monday, September 14, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

ஆயிரத்தில் ஒருவன் – தனுஷ் (இரண்டாம் பாகம்)

January 4, 2021

புத்தாண்டு அன்று இயக்குனர்  செல்வராகவன் அவரது ரசிகர்களுக்கு கொடுத்த ட்ரீட் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் குறித்த அப்டேட்(AO 2). ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷ் தான் நடிக்கவுள்ளார் என்று அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஆயிரத்தில் ஒருவன் படம் 2010 ஆம் ஆண்டு வெளியானது. சரியாக பத்து வருடங்கள் கழித்து படத்தின் இரண்டாம் பாகம் பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆயிரத்தில் ஒருவன் படம் வெளியான சமயத்தில் அவ்வளவாக ஓடவில்லை. வழக்கமாக, செல்வராகவன் படம் என்றாலே வெளியாகி சில வருடங்கள் கழித்து தான் கொண்டாடப்படும். தனுஷ் நடிப்பில் வெளிவந்த புதுப்பேட்டை படமும் இதற்கு ஒரு சான்று. புதுப்பேட்டை படம் செல்வராகவனுக்கு சின்ன சருக்கலை கொடுத்தாலும் தனுஷிற்கு கதாநாயகனாக ஒரு அங்கீகாரத்தை கொடுத்தது.

ரி – ரீலிஸ்: அமர்க்களம்

விஜய் அஞ்சலி

விடாமுயற்சி – 5 காட்சிகள்


ஆயிரத்தில் ஒருவன் படத்தில் உள்ள முக்கிய இரு கதாபாத்திரங்கள் சோழ மன்னரும், தூதுவனும் தான்.  சோழ மன்னராக நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன் அவர்களும், தூதுவனாக கார்த்தியும் நடித்திருப்பார்கள். நடிப்பில் பார்த்திபனை பற்றி சொல்ல வேண்டியதில்லை. பருத்தி வீரன் படத்தில் அறிமுகமான கார்த்தி, அறிமுக நடிகர் என்று சொல்லமுடியாத அளவிற்கு யதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். ஆயிரத்தில் ஒருவன் படத்திலும் தூதுவனாக, அவரது கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்.

  


தமிழ்  சினிமாவில் தனுஷ் என்னும் அற்புத கலைஞரை வளர்த்தெடுத்ததில் செல்வராகவனின் பங்கு முக்கியமானது. புதுப்பேட்டை கொடுத்த ஹீரோ அந்தஸ்தை வைத்து கொண்டு நடிப்பில் தன்னை மெருகேற்றினார் தனுஷ். பென்சில்ல கோடு கிழிச்ச மாதிரி இருக்கான் இவன் எல்லாம் என்ன ஹீரோ என்று கேலி செய்தவர்கள் முன் நடிப்பின் மூலம் தன்னை நிரூபித்துக் காட்டினார் தனுஷ்.  தனுஷின் நடிப்பு மட்டுமல்லாமல் கதைத் தேர்வும் சிறப்பாக இருக்கும். ஆடுகளம் படத்தில் அவர் வெளிப்படுத்திய நடிப்பு சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பெற்று தந்தது. தொடர்ந்து வடசென்னை போன்ற படங்கள் தனுஷின் மேல் இருக்கும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது.அரசுனில் அந்த எதிர்பார்பை எல்லாம் பூர்த்தி செய்திருப்பார். அசுரனில் வரும் சிவசாமியை யாரும் அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. இளமையில் துடிப்பான நடிப்பையும், வயதானபின் வரும் தளர்ச்சியையும் அவ்வளவு தேர்ந்த உடல்மொழியால் வெளிப்படுத்தியிருப்பார். 
புதுப்பேட்டையில் இருந்து அசுரன் வரை தனுஷின் வளர்ச்சியும் அசுர வேகத்தில் இருந்தது.  அதே வேகத்தோடு ஹாலிவுட்டிலும் கால் பதித்து விட்டார் தனுஷ். ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகத்தில் தனுஷின் கதாபாத்திரம் என்ன, தோற்றம் எப்படி இருக்கும், அவரது நடிப்பு எப்படி இருக்கும் என்று இப்போதே எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டனர் ரசிகர்கள். 2024 ல் ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம் திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தனை வருடங்கள் கடந்த பிறகும் ஆயிரத்தில் ஒருவன் படம் கொண்டாடக் காரணம் ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை. இரண்டாம் பாகத்திலும் ஜி.வி.பிரகாஷின் இசையே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

 புத்தாண்டிற்கு திரையரங்குகளில் ஆயிரத்தில் ஒருவன் படம் மீண்டும் திரையிடப்பட்டது. இதனால் படத்திற்கு இருக்கும் ஆதரவை நினைத்து எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புத்தாண்டு அன்று இரண்டாம் பாகத்திற்கான அப்டேட்டை கொடுத்துள்ளார்.இரண்டாம் உலகம், NGK என செல்வராகவனின் அடுத்தடுத்த படங்கள் நினைத்த அளவிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. செல்வராகவனின்  தொடர் தோல்விகளுக்கு ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் முற்றுப்புள்ளி வைக்குமா? தனுஷின் நடிப்பு திறமைக்கு தீனி போடுவதாக இருக்குமா ஆயிரத்தில் ஒருவன் இரண்டாம் பாகம்?

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளை திறப்பு : பெற்றோரிடம் கருத்து கேட்பு

Next Post

மெட்ரோ ரயில் திட்டம் சென்னை மாநகரில் நீட்டிப்பு : தமிழக அரசு முடிவு

Next Post

மெட்ரோ ரயில் திட்டம் சென்னை மாநகரில் நீட்டிப்பு : தமிழக அரசு முடிவு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version