இயக்குநர் ஷங்கரோடு இனி நோ சகவாசம் – வைகைப்புயல் வடிவேலு தடாலடி

இயக்குநர் ஷங்கரோடு இனி நோ சகவாசம் – வைகைப்புயல் வடிவேலு தடாலடி

சுபாஷ்கரனின் லைகா நிறுவனம் தயாரித்து சுராஜ் இயக்கும் நாய் சேகர் என்ற புதிய படத்தில் நடிகர் வடிவேலு நடிக்க உள்ளார். இயக்குநர் சுராஜ் இயக்குகிறார். இது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு சென்னை தியாகராய நகரிலுள்ள அக்கார்ட் ஹோட்டலில் நடைபெற்றது.

வைகைப்புயல் சந்தித்த சூறாவளிப் புயல்

படத்தில் அறிமுக கூட்டத்தில் பேசிய வடிவேலு, நான் அனுபவித்துள்ள துன்பத்தை வேறு யாரும் அனுபவிக்க முடியாது. வைகைப்புயல் என என்னை சொல்வார்கள். இடைப்பட்ட இந்த 4 ஆண்டுகளில் என் வாழ்வில் நான் சூறாவளிப் புயலையே சந்தித்து விட்டேன். கடந்த 4 ஆண்டில் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது மீண்டும் நடிக்க வந்ததற்கு கடவுள்தான் காரணம். கொரோனா எல்லோரையும் மிரள வைத்துவிட்டது. கொரோனா காலத்தில் எனது காமெடி மக்களுக்கு மருந்தாக அமைந்த்து எனக்கும் மருந்தாக இருந்தது. சுபாஷ்கரன் எனக்கு வாழ்க்கை கொடுத்து சபாஷ்கரன் ஆகிவிட்டார். எனது பயணம் நகைச்சுவை பயணமாக இனி தொடரும். சாகும் வரை நகைச்சுவை நடிகனாக  தொடர வேண்டும் என்பதே எனது ஆசை. முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்த பிறகு எனக்கு வாழ்க்கை பிரகாசமாக மாறி விட்டது எனத் தெரிவித்தார்.

நயன்தாரா ஜோடியா?

நாய் சேகர் படத்தில் நயன்தாரா ஜோடியாக நடிக்கிறாரா என்கிற கேள்விக்கு பதிலளித்த வடிவேலு, இப்படத்தில் நயன்தாரா நடிப்பதாக எல்லாம் எனக்கு எந்த தகவல் இல்லை. இந்த படத்தில் கதாநாயகி கிடையாது எனத்தெரிவித்தார்.

ஷங்கரோடு சகவாசம் இல்லை

இயக்குநர் ஷங்கர் குறித்த கேள்விக்கு பதிலளித்த வடிவேலு கால் வைத்த இடமெல்லாம் கண்ணி வெடியாக அமைந்தது. என் மூலம் நட்டம் ஏற்பட்டதாக இயக்குநர் சங்கர் சொன்னது எல்லாம் பொய். 100 கோடி நட்டம் ஏற்பட்டது என்று கூட சொல்லுவார்கள். சங்கரின் சாவகாசமே இனி எனக்கு வேண்டாம். சங்கர் இருக்கும் ஏரியாப் பக்கமே இனிப் போக மாட்டேன் எனக் குறிப்பிட்டார்.

ரெட் கார்ட்

வரலாற்று படம் நடிப்பதற்கு இனி வாய்ப்பில்லை . அரசியல் குறித்து எந்த முடிவும் இல்லை. எனக்கு ரெட் கார்ட் போடப்பட்டது என்பதே பொய். வாய்மொழியாக கூறப்பட்ட வார்த்தை இது. முன்பு நடித்ததை விட இனி  பிரமாண்டமாக நடிப்பேன்.

உதயநிதியுடன் நடிக்க வாய்ப்பு?

உதயநிதி கூட நடிக்க வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக நடிப்பேன். திமுக ஆட்சி நன்றாக இருக்கிறது.மக்கள் மகிழ்ச்சியாக உள்ளனர் என தெரிவித்தார்.

விவேக்கிற்கு இரங்கல்

இந்த நிகழ்ச்சி தொடங்கியவுடன் விவேக்கிற்கு தான் இரங்கல் தெரிவித்திருக்க வேண்டும். விவேக் என்னுடைய அருமையான நண்பன். அவனது இறப்பு பெரும் வேதனையை தந்தது. அவனுடைய இடத்தையும் சேர்த்து நிரப்ப வேண்டிய பொறுப்பை கடவுள் எனக்கு வழங்கியுள்ளார் எனத் தெரிவித்த நாய் சேகர், நாய்சேகர் படத்தில் ஒரு பாடல் பாட உள்ளதாகவும் கூறினார்,

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *