ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்!

ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய்!

விஜய் தனது மக்கள் இயக்கத்தில் உள்ள சில அதிருப்தி நிர்வாகிகளை மாற்றி அமைத்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடிகர் விஜய்யின் தந்தை விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் கட்சியாக பதிவு செய்து வரும் சட்ட மன்ற தேர்தலில் போட்டியிட இருப்பதாக அறிவித்து இருந்தார்.

இதனை கடுமையாக எதிர்த்த விஜய் தனது இயக்கத்தின் பெயரையோ, கொடியையோ, தனது புகைப்படத்தையோ தேவையில்லாமல் யாராவது பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் தனது மக்கள் இயக்கத்தில் உள்ள அதிருப்தி நிர்வாகிகளை மாற்றிவிட்டு புதிய நிர்வாகிகளின் பட்டியலை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளார். மாவட்ட இளைஞரணி, மாணவரணி, மகளிர் அணி, மீனவர், வர்த்தக அணி போன்றவற்றின் தலைவர்கள் பெயர்கள் இதில் இடம் பெற்றுள்ளது.

READ MORE- ‘கல்யாணமா அட போங்க’- வெட்கப்பட்ட சிம்பு!

மேலும், தனது பெயர் புகைப்படம் மற்றும் இயக்கத்தின் பெயர் மற்றும் கொடி ஆகியவற்றை மாநில மாவட்ட பொறுப்பாளர்கள் தலைவர்கள் அனுமதி பெற்ற பின்பே பயன்படுத்த வேண்டும் எனவும் மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *