‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கில் நயன்தாராவாக ஸ்ரீதேவி மகள்

‘கோலமாவு கோகிலா’ இந்தி ரீமேக்கில் நயன்தாராவாக ஸ்ரீதேவி மகள்

’கோலமாவு கோகிலா’ படத்தின் இந்தி ரீமேக்கில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் அனிருத் இசையில் கதையின் நாயகியாக நயன்தாரா நடித்த படம் ’கோலமாவு கோகிலா’. இத்திரைப்படம் தமிழில் வெற்றி  பெற்றது. நயன்தாராவுடன் யோகி பாபு, சரண்யா, ஜாக்குலின் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். “டார்க் ஹியூமர்” பாணியில் எடுக்கப்பட்ட இந்தப் படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

நயன்தாரா, யோகிபாபுவின் நடிப்பு பெரிதும் பேசப்பட்டது. இப்போது இந்தப்படம் இந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. நயன்தாரா கேரக்டரில் நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். ஷூட்டிங் இம்மாத இறுதியில் துவங்கவுள்ளது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. 45 நாட்கள் எடுக்கப்படவுள்ள ஷூட்டிங் பெரும்பாலும் பஞ்சாபில் படமாக்கப்படவுள்ளது.

Read more – SSC CGL 2020 தேர்வுக்கான அறிவிப்பு வெளியீடு

மேலும், கோலமாவு கோகிலா கன்னட மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது. இதில், நயன்தாராவின் கதாப்பாத்திரத்தில் நடிகை ரச்சிதா ராம் நடிக்கவிருக்கிறார். மயூரா ராகவேந்திரா என்பவர் இயக்கவுள்ளார். இந்தி கோலமாவு கோகிலா ரீமேக்கை சித்தார்த் சென் குப்தா என்ற அறிமுக இயக்குநர் இயக்க தனுஷின் ’அட்ராங்கி ரே’ படத்தினை இயக்கிவரும் ஆனந்த் எல் ராய் தயாரிக்கவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *