பாலிவுட்டில் கருப்பாக இருக்கும் நடிகைகளை இப்படி தான் பயன்படுத்துவார்கள்- நவாசுதின் சித்திக் பகீர் குற்றச்சாட்டு

பாலிவுட்டில் கருப்பாக இருக்கும் நடிகைகளை இப்படி தான் பயன்படுத்துவார்கள்- நவாசுதின் சித்திக் பகீர் குற்றச்சாட்டு

இந்தி திரையுலகில் நிறவேற்றுமை காரணமாக பல திறமையான நடிகர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக பிரபல பாலிவுட் நடிகர் நவாசுதின் சித்திக் தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி நடிகர்களில் மிகவும் வித்தியாசமான கலைஞராக நவாசுதின் சித்திக் அறியப்படுகிறார். தமிழில் ரஜினிகாந்த் நடித்து வெளியான பேட்ட திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவிற்கு இவர் அறிமுகமாகினார்.

அவர் 2012-ம் ஆண்டில் பாலிவுட்டில் அறிமுகமானபோது தனது முதல் படமான ‘தலாஷ்’ படத்தில் சிறந்த துணை நடிகருக்கான ஆசியன் பிலிம் அவார்ட்ஸ் விருதைப் பெற்றார்.

அதைத் தொடர்ந்து 2013-ல் வெளியான ‘லஞ்ச் பாக்ஸ்’ படத்திற்காக ஆசிய பசிபிக் திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். தனது தனி நடிப்புத் திறமையினால் தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டவர் இவர்.

இந்நிலையில் கடந்த அக்டோபர் 2 அன்று சுதீர் மிஸ்ரா இயக்கி, நெட்ஃபிளிக்ஸில் வெளியான ‘சீரியஸ் மென்’ திரைப்படத்திற்காக சர்வதேச எம்மி விருதுக்காக நவாசுதின் சித்திக் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

இதனையொட்டி நவாசுதின் சித்திக் அளித்துள்ள பேட்டியில்,

”சீரியஸ் மென் திரைப்படத்தை மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார் சுதிர் சாப். அவர் சினிமாவைப் பற்றி அபரிமிதமான அறிவைக் கொண்டிருக்கிறார், அவருடைய சிந்தனை, செயல்முறை மிகவும் யதார்த்தமானது என்றார்.

தொடர்ந்து, இப்படத்தில் என்னுடன் கதாநாயகியாக நடித்துள்ள, இந்திரா திவாரி ஏற்கெனவே பாலிவுட்டில் அறிமுகமாகியும் சரியாக வாய்ப்பு இல்லாமல் இருந்து வருகிறார். இப்படத்தில் அவரின் நடிப்பு மிகச் சிறப்பாகப் பேசப்படும். இதற்குப் பிறகு அவருக்கு நிறைய நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கும். கதாநாயகியாகவே இனி நடிப்பார். அதுவே அவருக்கு உண்மையான வெற்றியாக அமையும்.

பாலிவுட்டில் நட்புறவு இல்லை. இனவெறிதான் இங்கு அதிகமாக இருக்கிறது. ஒரு நடிகை கறுப்பாக இருந்தால் ஒதுக்கிவிடுகிறார்கள். உங்களுக்குப் படம் நன்றாக வரவேண்டுமெனில் சிறப்பாக நடிப்பவர்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எங்கள் இயக்குநர் அதை சரியாக செய்துள்ளார். என பாலிவுட்டில் நடக்கும் அரசியலை வெளிப்படுத்தியுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *