சமந்தாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்த ‘அருவி’ நடிகை அதிதி பாலன்!

சமந்தாவின் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் இணைந்த ‘அருவி’ நடிகை அதிதி பாலன்!

டோலிவுட் இயக்குனர் குணசேகர் சகுந்தலம் என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த வரலாற்றுக் காதல் காவியத்தில் சமந்தா முன்னணிக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு ஹைதராபாத்தில் தொடங்கியுள்ளது. தற்போது இந்தப் படத்தில் ‘அருவி’ நடிகை அதிதி பாலன் இணைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருவி படத்தின் மூலம் பிரபலமான அதிதி பாலன் கடைசியாக விஜய் சேதுபதி உடன் ‘குட்டி ஸ்டோரி’ அந்தாலஜி படத்தின் நடித்திருந்தார். தற்போது நிவின் பாலி உடன் மலையாள படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், சகுந்தலம் படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமாகவுள்ளார் அதிதி பாலன். அவர் படப்பிடிப்பில் இணைந்துவிட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. அதிதிக்கு இந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்திரம் இருக்கிறதாம். இந்த படத்தில் மலையாள நடிகர் தேவ் மோகன் கதாநாயகனாக நடிக்கிறார்.

சகுந்தலம் திரைப்படம் பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. இந்தப் படத்திற்காக மட்டும் சமந்தா 5 மாதங்கள் தேதிகள் ஒதுக்கியுள்ளாராம். இந்தப் படம் இந்தியாவில் பல முக்கிய மொழிகளில் வெளியாக உள்ளது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *