தல அஜித்குமார் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார்.

எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித்குமார் நடித்து வரும் திரைப்படம் “வலிமை”.அதிரடி ஆக்ஷன் சேஸிங், தாய்ப்பாசம் என மசாலா திரைப்படமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தில் அஜித்குமாருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி நடித்துள்ளார் வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா கும்மாகொண்டா நடித்துள்ளார். யோகி பாபு, புகழ், போன்ற சிலர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். நேற்று கார்த்திகேயா பிறந்த நாளை முன்னிட்டு வலிமை குழுவினர் சார்பாக புதிய போஸ்டர் வெளியிடப்பட்டு வரவேற்பை பெற்றது.
தற்போது வலிமை படத்தின் ரிலீஸ் தேதி தீபாவளி ஆயுத பூஜை கிறிஸ்துமஸ் என்ற குழப்பத்தில் ரசிகர்கள் இருந்தனர். இந்நிலையில் வலிமை திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.




