பிப். 28-ல் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ‘ஏலே’ திரைப்படம்…!

பிப். 28-ல் விஜய் தொலைக்காட்சியில் வெளியாகும் ‘ஏலே’ திரைப்படம்…!

சமுத்திரக்கனி, மணிகண்டன் ஆகியோர் நடித்த சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா சமீம் இயக்கிய ஏலே திரைப்படம், திரையரங்கு ஓடிடியில் இல்லாமல் விஜய் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது.

சில்லுக்கருப்பட்டி படத்தின் இயக்குனர் ஹலிதா சமீம் அவர்களின் அடுத்த படமான ஏலே படத்தில் சமுத்திரக்கனி, மணிகண்டன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் தயாரித்திருந்தது. இந்த படம் பிப்ரவரி 12ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் திரையரங்கு உரிமையாளர்களின் கெடுபிடியால் படம் வெளியாகவில்லை.

திரையரங்குகளில் படம் வெளியாகி 30 நாள்கள் கழித்து தான் ஓடிடியில் ரிலீஸ் செய்ய வேண்டும் என்ற திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் கடிதம் கேட்டனர். ஆனால் இதற்கு தயாரிப்பு நிறுவனம் ஒத்துவரவில்லை.

இதுதொடர்பாக நடந்த பேச்சு வார்த்தையும் பலனளிக்கவில்லை. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனமான ஒய் நாட் ஸ்டுடியோஸ் வெளியிட்ட அறிக்கையில், ” சில ஆச்சரியமான விதிகள் மற்றும் சில காரணங்களாலும் படத்தை திரையரங்குகளில் கொண்டுவர முடியவில்லை. இருந்தாலும் எங்களது படைப்பை இந்த உலகம் முழுவதும் எடுத்துச் செல்ல வேண்டிய பொறுப்பு இருக்கிறது” என்று கூறியுள்ளது.

இதனால் முதன்முறையாக திரையரங்குகளிலும் இல்லாமல் போட்டியிலும் இல்லாமல் நேரடியாக விஜய் தொலைக்காட்சியில் வெளியாக இருக்கிறது ஏலே திரைப்படம். இந்த அறிவிப்பால் திரையுலகினர் அனைவரும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்த படம் விஜய் டிவியில் வெளியாவதால் ஹாட்ஸ்டாரிலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *