பிரபல இசையமைப்பாளர் அனிருத் எஸ்பிஐபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்…

பிரபல இசையமைப்பாளர் அனிருத் எஸ்பிஐபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்…
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மறைவுக்கு இசையமைப்பாளர் அனிருத் இரங்கல் தெரிவித்து உள்ளார்.

உடல்நிலை குறைபாட்டால் மருத்துவனையில் இருந்து சிகிச்சை பெற்று வந்தார் பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பி. இவ்வாறு இருக்க இவர் நேற்று மதியம் இறைவனடி சேர்ந்தார். பல நாட்கள் விடாமல் சிகிச்சை அளித்தும் இவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் உலக சினிமாவே வருத்தத்தில் மூழ்கி உள்ளது. திரை உலகை சேந்த பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். பாடலால் நம் மனதில் நீங்காத இடம் பிடித்த இவர் உலகை விட்டு பிரிந்தது அனைவருக்கும் அதிர்ச்சியாக உள்ளது.

இந்நிலையில் பிரபல இசையமைப்பாளர் அனிருத் தன ட்விட்டர் பக்கத்தில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்திவிட்டு தேசத்தின் குரல் மறைந்துவிட்டது. அவர் உடனான நினைவுகள் விலைமதிப்பற்றவை, மறக்க முடியாதவை. மிஸ் யூ, லவ் யூ சார் என பதிவிட்டு உள்ளார்.

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், அனிருத் இசையில் பேட்ட படத்தில் இடம்பெற்ற ‘மரண மாஸ்’ மற்றும் தர்பார் படத்தில் இடம்பெற்ற ‘சும்மா கிழி’ போன்ற பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *