அட! கடைசியில நம்ம ரம்யா பாண்டியனையே கோபப்பட வச்சிட்டாரே ரியோ

அட!  கடைசியில நம்ம ரம்யா பாண்டியனையே கோபப்பட வச்சிட்டாரே ரியோ

இதுவரை கோபப்படாத ரம்யா பாண்டியனையே ரியோ கோபப்பட வைத்திருக்கிறார் இன்றைய பிக்பாஸ் ப்ரோமோவில்.

Biggboss 4

நடிகை ரம்யா பாண்டியன் ஜோக்கர் மற்றும் ஆண் தேவதை போன்ற தமிழ் திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவரது மொட்டைமாடி புகைப்படங்களின் மூலமாக நிறைய ரசிகர்களை கட்டி இழுத்தவர். பின்பு விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கு பெற்றார். அந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்கள் அனைவருமே ஏதோ ஒரு கட்டத்தில் கோமாளிகள் மீது கோபப்படுவார்கள், திட்டுவார்கள். ஆனால் ரம்யா பாண்டியன் எந்தவொரு எபிசோடுகளிலும் தன்னுடைய சிரித்த முகத்தை கூட மாற்றியதில்லை.

பிக்பாஸ் வீட்டிற்கு வந்த பிறகு கூட ரம்யா பாண்டியன் அந்த லெவலையே கடைபிடித்து கொண்டு வந்தார். ஆனால் இன்றைய ப்ரோமோவில் ரம்யா பாண்டியன் ரியோவிடம் கோபப்படுவது போல காட்டப்பட்டுள்ளது. அனைவரும் சாப்பிடும் இடத்தில் அமர்ந்து கொண்டிருக்கும் போது இவர்கள் இருவருக்கும் இடையே விவாதம் ஏற்படுகிறது.

ரியோவிடம் ரசிகர்கள் சற்றும் எதிர்பாராத ஒன்று தான் பிக்பாஸில் நடந்து கொண்டிருக்கிறது. ரியோவை கலாய்க்கும் விதமாகவும் எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகவும் சமூக வலைத்தளங்களில் மீம்ஸுகள் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

ரம்யாபாண்டியனுக்கு ஏற்கனவே ரசிகர்கள் ஆதரவு அதிகம். தற்போது ரியோராஜ் ரம்யாபாண்டியனுடன் மோதுவதால் ரசிகர்களின் ரெஸ்பான்ஸ் ரியோவுக்கு எதிராக எப்படி இருக்கும் என்று போக போக தான் தெரியும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *