ஏ.வி.எம். கார்ட்டூன் ஸ்டூடியோ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது…

ஏ.வி.எம். கார்ட்டூன் ஸ்டூடியோ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது…
சென்னையில் உள்ள ஏ.வி.எம்.கார்ட்டூன் ஸ்டூடியோ மற்றும் டப்பிங் தியேட்டர் விரைவில் திருமண மண்டபமாக மாறுகின்றது.
AVM studio

சென்னை:

சென்னையில் உள்ள ஏ.வி.எம். ஸ்டூடியோவின் ஒரு பகுதி ஏற்கனவே அடுக்குமாடி குடியிருப்பாக மாறிவிட்டது. அதன் மற்றொரு பகுதி மருத்துவமனையாக மாறியிருக்கிறது. ஏ.வி.எம். ராஜேஸ்வரி தியேட்டரும் வேறு ஏதோ காரணத்திருக்காக இடிக்கப்படுகிறது. ஏ.வி.எம். ஸ்டூடியோவின் அழகிய வடிவமாக இருந்த ‘கார்டன் ஸ்டூடியோ’ விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது.சினிமா தொழில் நாளுக்கு நாள் நலிந்து வருவதை தொடர்ந்து, சென்னையில் அமைந்திருந்த ஸ்டூடியோக்களும், தியேட்டர்களும் காணாமல் போய்விட்டன. அவை இருந்த அடையாளமே தெரியாத அளவுக்கு அடுக்குமாடி குடியிருப்பாகவும் , திருமண மண்டபங்களாக மாறிவருகிறது .

இதற்கு ஏ.வி.எம். ஸ்டூடியோவும் விதிவிலக்கு அல்ல.இங்கு அபூர்வமாக தான் படப்பிடிப்புகளும்,பட டப்பிங் பணிகளும் நடைபெறுகிறது.இதனை தொடர்ந்து யோகிபாபு நடித்த ‘மண்டேலா’ என்ற படத்தின் படப்பிடிப்பு நேற்று இங்கு நடைபெற்றது . இதுவே ‘கார்டன் ஸ்டூடியோ’வில் நடந்த கடைசி படப்பிடிப்பாக அமைந்தது . இந்த இடம் விரைவில் திருமண மண்டபமாக மாறுகிறது.

அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *