சிம்பு கொடுத்த புதுப்படத்தின் அப்டேட் வாயடைத்த போன ட்ரோல் செய்பவர்கள்!!!

சிம்பு கொடுத்த புதுப்படத்தின் அப்டேட் வாயடைத்த போன  ட்ரோல் செய்பவர்கள்!!!

தமிழ் திரையுலகில் லிட்டில் சூப்பர் ஸ்டார் என அழைக்கப் படும் சிம்பு இவர் பெயர்க்கு ஏற்றவாறு பல சர்ச்சைகளில் மாட்டிக்கொள்வார், மேலும் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை போன்ற புகார்கள் அவர் மேல் சுமத்தப்படும் புகார்கள்.

மேலும் உடல் எடை கூடிவிட்டதாகவும் பல புகார்கள் அவரின் மேல் வைக்கப்படுகின்றன அதை எல்லாம் போக்கும் விதமாக புதுவித தோற்றத்தில் சிம்புவின் 46-வது படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். படத்துக்கு ஈஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளனர். இந்த படத்துக்காக சிம்பு தனது உடல் எடையை 30 கிலோ வரை குறைத்து இருக்கிறார். சிம்பு மெலிந்த தோற்றத்துடன் இருக்கும் போஸ்டர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது அவரது ரசிகர்களும் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

இப்படத்தின் ஷூட்டிங் கடந்த மாதம் தொடங்கியது. ஒரே மாதத்தில் படப்பிடிப்பை நடத்தி முடிக்க உள்ளதாக கூறியிருந்தனர். சிம்புவை வைத்துக்கொண்டு இதெல்லாம் நடக்குற காரியமா என பலரும் கிண்டலடித்து வந்தனர்.

அதற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் வகையில் சிம்பு செய்து காட்டியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டதாக சிம்பு அறிவித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் டீசர் தீபாவளி அன்று வெளியாகும் எனவும், பொங்கல் தினத்தில் திரைப்படம் வெளியாகும் என்றும் சிம்பு கூறியிருக்கிறார். இது ரசிகர்களிடையே இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *