விஸ்வாசம் திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது…!!

விஸ்வாசம் திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது…!!

விஸ்வாசம் திரைப்படத்துக்கு இசையமைத்ததற்காக இசையமைப்பாளர் இமானுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

67-வது தேசிய விருது விழாவில் 2019-ம் ஆண்டு வெளியான படங்களுக்கான விருதுகள் வழங்கும் விழாவில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அஜித் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இயக்குநர் சிவா, நடிகர் அஜித் கூட்டணியில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் விஸ்வாசம். இந்தப் படத்தில் நயன்தாரா, ஜெகபதி பாபு, அனிகா, யோகி பாபு, தம்பி ராமையா, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு டி.இமான் இசையமைத்திருந்தார்.

“கண்ணான கண்ணே” பாடல் அப்பாவுக்கு மகளுக்குமான உறவை பிரதிபலிக்கும் பாடலாக அமைய வேண்டும் என்பதற்காக பாடலாசிரியர் தாமரையையும், பாடகர் சித் ஸ்ரீராமையும் வரவழைத்து பதிவு செய்தோம். நாங்கள் எதிர்பார்த்தது போலவே அந்த பாடல் ஒவ்வொரு குடும்பத்திலும் அங்கமாக மாறியது. இசையமைப்பாளர் டி.இமான் முதல்முறையாக தேசிய விருது பெற்றுள்ளார்.

இந்தப் பாடலை பதிவு செய்து நடிகர் அஜித்திடம் கொண்டு சென்றபோது,  ஒரு நல்ல பாட்டு நம்ம படத்துல இருக்குறது ரொம்ப சந்தோஷம் என்று கூறினார். அனைவரின் மனதிற்கு பிடித்த பாடலுக்கு தேசிய விருது அங்கீகாரம் கிடைத்திருப்பது மனதிற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *