சிவகார்த்திகேயனுக்கும் பொன்ராமுக்கும் மோதல்? இயக்குனர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு!!

சிவகார்த்திகேயனுக்கும் பொன்ராமுக்கும் மோதல்? இயக்குனர் வெளியிட்ட டிவிட்டர் பதிவு!!

இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், சத்யராஜ், சூரி, ஸ்ரீதிவ்யா உள்ளிட்டோர் நடித்து வெளியான திரைப்படம் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’. கடந்த 2013-ம் ஆண்டு வெளியான இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது.

சிவகார்த்திகேயனுக்கும் பெரிய பிரேக் கொடுத்த இத்திரைப்படம் அவருக்கு தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிக் கொடுத்தது. அப்படத்தின் காமெடி காட்சிகள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனிடையே ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக தகவல் பரவி வந்தது.

இந்த தகவல்கள் குறித்து சமீபத்திய பேட்டியில் இதுகுறித்து பேசிய சிவகார்த்திகேயன், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில், அந்த திரைப்படத்தின் இயக்குனர் பொன்ராம், ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ வருவது உறுதி என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பதிவில், “சிவகார்த்திகேயன் சார் மெச்சூரிட்டி ஆகிவிட்டார், அடுத்து வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களை வைத்து ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’ எடுப்போம். போட்றா வெடிய” என பதிவு செய்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *