வட்டி கட்டவில்லை என்று கட்டி வைத்து அடித்த நடிகர்.

வட்டி கட்டவில்லை என்று கட்டி வைத்து அடித்த நடிகர்.
திருச்சியை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் வட்டிக்கு கடன் வாங்கி இருக்கிறார். கொரோனாவால் வட்டி கட்ட தாமதமான நிலையில் அவரை கட்டிவைத்து அடித்தார் நடிகர்.

திருச்சி கொட்டப்பட்டு ஐஸ்வர்யா நகர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 56). இவர் பொன்மலை ரெயில்வே பணிமனையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2019-ம் ஆண்டு, மறைந்த நடிகர் அலெக்சின் மருமகனும், நடிகருமான ஜெரால்டு என்பவரிடம் ரூ.35 ஆயிரம் கடன் வாங்கியுள்ளார்.

அதற்கு வட்டி கட்டி வந்த நிலையில் கொரோனா பிரச்சினையால் சில மாதமாக பணம் கட்டவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் கடந்த சனிக்கிழமை வழக்கம்போல் வேலை முடிந்து பணிமனையில் இருந்து வெளியே வந்த ஆறுமுகத்தை, 3 பேர் வழிமறித்து இருசக்கர வாகனத்தில் அவரை கடத்திச்சென்றனர்.

அவரை கட்டி வைத்து அடித்துள்ளனர். பின்னர், அவர்களிடம் கால அவகாசம் கேட்டு, அங்கிருந்து தப்பி வந்த அவர் இதுபற்றி பொன்மலை போலீஸ்நிலையத்தில் புகார் செய்தார். இதில் வட்டிக்கு மேல் வட்டிகேட்டு மிரட்டி பணி முடித்து விட்டு வெளியே வந்த என்னை 3 பேர் கடத்திச்சென்று கட்டி வைத்து அடித்து உதைத்தனர் என்று புகாரில் தெரிவித்துள்ளார்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *