இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம்…!!

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம்…!!

இயக்குனர் மாரி செல்வராஜின் அடுத்த படத்தில் கபடி வீரராக துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.

கலைப்புலி தாணு தயாரித்திருக்கும் கர்ணன் திரைப்படத்தில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், யோகி பாபு, லட்சுமி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில் பாடல்கள் ஹிட் அடித்திருந்த நிலையில் ஏப்ரல் 9-ம் தேதி திரைக்கு வந்த கர்ணன் திரைப்படமும் மூன்று நாட்களில் ரூ.25 கோடி வரை வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒருபக்கம் வசூல் ரீதியாக வரவேற்பைப் பெற்றுள்ள இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் பலரது பாராட்டைப் பெற்று வருகிறது.

பரியேறும் பெருமாள் என்ற தனது முதல் படத்திலேயே அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் மாரி செல்வராஜ். இரண்டாவதாக அவர் இயக்கியிருக்கும் கர்ணன் திரைப்படமும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

துருவ் விக்ரம் தனது தந்தையுடன் இணைந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘சியான் 60’ என்ற படத்தில் நடித்து வருகிறார்.இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தததும் மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் துருவ் விக்ரம் நடிக்கவுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *