Tuesday, September 15, 2026
  • Login

No products in the cart.

SeithiAlai
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
Shop
No Result
View All Result
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்
No Result
View All Result
SeithiAlai
No Result
View All Result
Home சினிமா

இப்படியொரு ஆபாசமா…புதிய தமிழ் படத்துக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு

October 8, 2020

விரைவில் வெளியாகவுள்ள இருட்டு அறையில் முரட்டு குத்து இரண்டாம் பாகத்துக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

ஹரஹர மஹா தேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து, கஜினிகாந்த் ஆகிய தமிழ்ப் படங்களை இயக்கியவர் சந்தோஷ் பி ஜெயக்குமார். இதற்கு அடுத்ததாக இரண்டாம் குத்து என்கிற படத்தை இயக்கியுள்ளார். இப்படத்தின் கதாநாயகனாகவும் அவர் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டரும் டீசரும் சமீபத்தில் வெளியாகின.
இந்நிலையில் இந்தப் படத்தின் போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்து மூத்த இயக்குநரும், தமிழ் திரைப்பட நடப்பு தயரிப்பாளர் சங்க தலைவருமான பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தயாரிப்பாளர்கள் சங்கம் ஒப்புதல்.. 8 மாதங்கள் கழித்து தியேட்டரில் வெளியாகின்றன தமிழ் திரைப்படங்கள்

தமிழ் திரைப்பட நடிகர்கள் சம்பளத்தில் 30 % விட்டுக்கொடுக்க வேண்டும்- பாரதிராஜா வேண்டுகோள்!

முத்தையா முரளிதரன் ஒரு இனத்துரோகி: நடிகர் விஜய்சேதுபதிக்கு இயக்குனர் இமயம் பாரதிராஜா கண்டனம்

சினிமாவினால் சாதி ஒழிப்பு சாத்தியப் பட்டிருக்கிறது. மதம் கடந்த மனங்கள் இணைவது சாத்தியப் பட்டிருக்கிறது. நேர்மையும் துணிவுமிக்க இளைஞர் களை உருவாக்குவது சாத்தியப் பட்டிருக்கிறது. உலகம் எங்கும் தமிழர் பண்பாடு, மண்ணின் மணம் பரப்புவது, பெண் சுதந்திரம் போன்ற எத்தனையோ எத்தனை சாத்தியமற்றவைகள் சாத்தியப்பட்டிருக்கிறது. இவையெல்லாம் சாதாரண மல்ல.

சினிமா வியாபாரமும் தான்… ஆனால் வாழைப்பழத்தை பயன்படுத்தி கேவலமான பதிவோடு பொதுமக்களின் பார்வைக்கு கொண்டு செல்லும் நிலைக்கு அந்த வியாபாரம் வந்து நிற்பது வேதனையடையச் செய்கிறது. இதற்காகவா இத்தனை ஜாம்பவான்கள் சேர்ந்து இந்த சினிமாவைக் கட்டமைத்தார்கள்? சினிமா வாழ்க்கை முறையைச் சொல்லலாம். தப்பில்லை.

இலைமறை காய் மறையாக சரசங்கள் பேசலாம். ஆனால் இப்படி படுக்கையை எடுத்து நடுத் தெருவில் வைப்பது எந்தவிதத்தில் சரி என்பது? நான் கலாச்சார சீர்கேடு எனக் கூவும் நபரல்ல. ஆனால் என் வீட்டின் கண்ணியம் காக்கப்பட வேண்டும் என நினைப்பவன். கலைநயத்தோடு செய்யப்படும் எந்த படைப்பும் ஆழ விழுந்து இரசிப்பவன். ஆனால் “இரண்டாம் குத்து” என்ற படத்தின் விளம்பரத்தை என் கண்ணால் பார்க்கவே கூசினேன்.

இத்தமிழ் நாட்டிலுள்ள எத்தனை நல்ல குடும்பங்கள் இதைப் பார்க்கக் கூசியிருக்கும்? எத்தனை வளரிளம் பருவத்தினரிடையே கசட்டை துப்பி வைத்திருக்கும்? கல்வியை போதிக்கிற இடத்தில் காமத்தைப் போதிக்கவா முன்வந்தோம்? இதையெல்லாம் அனுமதியின்றி வெளியிடக் கிடைத்த சுதந்திரம் என்னை பதைக்க வைக்கிறது… நாளை இன்னும் என்ன என்ன கேவலங்களை சாணியறைவார்களோ என்று கவலைகொள்கிறேன்.

இதையெல்லாம் செய்பவர்கள் வீட்டில் பெண் மக்கள் இல்லையா?? அவர்கள் இதைக் கண்டிக்க மாட்டார்களா? அவர்கள் கண்டிப்பார்களோ இல்லையோ நான் இங்கிருக்கும் மூத்தவர்களில் ஒருவன் என்ற முறையில் கண்டிப்பேன். இப்படியொரு ஆபாசம் தமிழ்த் திரையுலகிற்கு ஆகாது எனக் கண்டிக்கிறேன். இதற்கெல்லாம் கிடுக்கிப்பிடி வேண்டும் என அரசையும் சென்சார் போர்டையும் வலியுறுத்துகிறேன். சமூகச் சீர்கேடுகள் செய்யும் படத்தை அரங்கேற்றாதீர்கள்.

எத்தனை கற்பழிப்புகள்…? குழந்தைச் சிதைவுகள்? போதாதா? இப்படிப்பட்ட படங்களும் சிந்தனையும் கழிவுகளையே சாப்பாட்டுத் தட்டில் வைக்கின்றன என்பதை மக்களும் உணர்ந்து கொள்ளுங்கள்.
இவ்வாறு பாரதிராஜா கூறியுள்ளார்.

Share this:

  • Share on Facebook (Opens in new window) Facebook
  • Share on X (Opens in new window) X
Previous Post

சிஎஸ்கே பிளேயர்ஸ் அந்த நெனப்புல ஆடிக்கிட்டு இருக்காங்க.. பங்கமாய் கலாய்க்கும் சேவாக்

Next Post

பேரிஸ்டவ்,வார்னர் அசத்தல் அதிரடி : பஞ்சாப் அணிக்கு 202 ரன்கள் இலக்கு

Next Post

பேரிஸ்டவ்,வார்னர் அசத்தல் அதிரடி : பஞ்சாப் அணிக்கு 202 ரன்கள் இலக்கு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Most Recent

“வெள்ளத்தால் மின் உற்பத்தி பாதிப்பு: நேபாளத்திற்கு 654 மெகாவாட் மின்சாரம் ஏற்றுமதி செய்ய இந்தியா அனுமதி”

September 14, 2026

வீடு வாங்குவது இன்னும் காஸ்ட்லியாகிறது! சென்னையில் விலை 13% உயர்வு — என்ன காரணம்?

September 14, 2026

சாம்பியன் சண்டே! ஒரே நாளில் இந்தியாவுக்கு 3 ஆசியக் கோப்பைகள்

September 14, 2026

உருகும் இமயமலை… இந்தியாவில் 189 பனிப்பாறை ஏரிகள் அபாயத்தில்; 56 ஏரிகளுக்கு மிக அதிக ஆபத்து! அடுத்து என்ன நடக்கும்?

September 14, 2026

நிறைவடைந்த BRICS மாநாடு: AI முதல் உலக வர்த்தகம் வரை… டெல்லியில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் என்ன?

September 13, 2026

7 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவில் ஜி ஜின்பிங்; மோடி சந்திப்பில் என்ன பேசப்பட்டது?

September 12, 2026
Load More

Categories

  • Featured
  • Sponsored Content
  • அரசியல்
  • அறிய வேண்டியவை
  • அறிவியல்
  • ஆட்டோ மொபைல்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி
  • சாதனை மனிதர்கள்
  • சினிமா
  • சிறப்பு கட்டுரைகள்
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2021
  • தொழில் நுட்பம்
  • படைப்புகள்
  • புகைப்பட தொகுப்பு
  • ராசி பலன்
  • லைப் ஸ்டைல்
  • வணிகம்
  • வலைஒளி
  • விளையாட்டு
  • வேலை வாய்ப்பு
  • About
  • Disclaimers
  • Privacy Policy
  • Terms & Conditions
  • Contact us
For Advertisement
Contact: 9176530083

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

No Result
View All Result
  • Login
  • Cart
  • செய்திகள்
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • உலகம்
    • விளையாட்டு
  • சிறப்பு கட்டுரைகள்
  • சினிமா
  • புகைப்பட தொகுப்பு
  • அறிவியல்
  • படைப்புகள்
  • மேலும்
    • ஆட்டோ மொபைல்
    • கல்வி
    • தொழில் நுட்பம்
    • வணிகம்
    • லைப் ஸ்டைல்
    • வேலை வாய்ப்பு
    • சாதனை மனிதர்கள்
    • ராசி பலன்

© 2020, All Rights Reserved SeithiAlai | Developed By Logesh

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.
Go to mobile version