விஜய்68 படத்தின் புதிய அப்டேட் வெளியானது

விஜய்68 படத்தின் புதிய அப்டேட் வெளியானது

விஜய் நடிக்கும் புதிய படம் தொடர்பாக, படத்தின் இயக்குநர் வெங்கட் பிரபு புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தில் நடித்துள்ள விஜய், அடுத்தாக இயக்குநர் வெங்கட் பிரபுவுடன் புதிய படத்தில் இணைந்துள்ளார். கல்பாத்தி எஸ் அகோரம் சார்பில் ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் தொடக்க நிலையில் உள்ளன.

இந்நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு தனது டிவிட்டர் பக்கத்தில் விஜய் நடிக்கும் 68-வது படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இரண்டு புகைப்படங்களை பகிர்ந்த அவர், “எதிர்காலத்திற்கு வரவேற்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *