எந்திரன் கதை திருட்டு வழக்கு… இயக்குநர் ஷங்கரின் அப்பீல் மனு தள்ளுபடி

எந்திரன் கதை திருட்டு வழக்கு… இயக்குநர் ஷங்கரின் அப்பீல் மனு தள்ளுபடி
எந்திரன் திரைப்படத்தின் கதை திருட்டு தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் ஷங்கரின் அப்பீல் மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

பிரமாண்ட ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், சந்தானம், கருணாஸ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘எந்திரன்’. 2010-ம் ஆண்டு இந்தப் படம் வெளியானது. இந்நிலையில் இந்த படத்தின் கதை தன்னுடையது என்று எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன் கடந்த 2010-ம் ஆண்டு சிவில் வழக்கும், காப்புரிமையை மீறியதாக ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு கேட்டு மற்றொரு வழக்கையும் தொடர்ந்தார்.

அந்த வழக்கில் அவர் கூறும்போது, “1996-ம் ஆண்டு ‘ஜூகிபா’ என்ற தலைப்பில் உதயம் என்ற பத்திரிகையில் தொடர் கதை எழுதினேன். அந்த கதையை என்னிடம் அனுமதி பெறாமல், இயக்குநர் ஷங்கர், ‘எந்திரன்’ என்ற தலைப்பில் படமாக எடுத்துள்ளார். எனவே, எனக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கவேண்டும்” என்று கூறியிருந்தார். இதுபெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று இயக்குநர் ஷங்கர் மற்றும் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ஆனால் இந்த வழக்கை விசாரணை செய்ய தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றம் மறுத்தது. மேலும் தொடர்ந்து வழக்கை விசாரிக்க உத்தரவிட்டது.
இந்த வழக்கில் விசாரணைக்கு தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக இயக்குநர் ஷங்கர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இதன் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது வழக்கு விசாரணைக்கு தடை கோரிய இயக்குநர் ஷங்கரின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவைப் பிறப்பித்தது.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *