மீண்டும் நிகழும் மூவேந்தர் சங்கமம். கண்டிப்பாக வெற்றி தான் என்று கொண்டாடும் ரசிகர்கள்

மீண்டும் நிகழும் மூவேந்தர் சங்கமம். கண்டிப்பாக வெற்றி தான் என்று கொண்டாடும் ரசிகர்கள்

தமிழ் சினிமாவின் மறக்க முடியாத ஒரு முக்கியமான நடிகர்களில் சிலம்பரசனும் ஒருவர். அவரது தந்தை விஜய டி ராஜேந்தர் படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து லிட்டில் சூப்பர் ஸ்டார் என்று பட்டம் வாங்கியவர்.

அதே போல வித்தியாசமான காதல் கதை கொண்ட படங்களை கொடுப்பவர் இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன். இசை உலகில் சாதனைகள் படைத்தவர் ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர் .ரஹ்மான்.

இந்த மூவரின் கூட்டணியில் வெளிவந்த விண்ணைத்தாண்டி வருவாயா , அச்சம் என்பது மடமையடா ஆகிய இரண்டு படங்களும் பிளாக்பஸ்டர் வெற்றியை ருசித்த படங்களாகும்.

இந்நிலையில் இந்த மூவரின் கூட்டணியில் உருவாக போகும் மூன்றாவது படத்தின் அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே. கணேஷ் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்த படத்திற்கு “நதிகளிலே நீராடும் சூரியன்” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

காக்க காக்க படத்தில் இடம்பெற்ற ஒன்றா இரண்டா ஆசைகள் பாடல் வரிகளில் இருந்து இந்த தலைப்பை தேர்ந்தெடுத்திருக்கிறார் கெளதம் வாசுதேவ் மேனன்.

மாநாடு , பத்து தல , நதிகளிலே நீராடும் சூரியன் என சிம்பு அடுத்தடுத்த படங்களின் அறிவிப்புகள் மூலம் தங்களை குஷிப்படுத்தியுள்ளார் என்று ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடி வருகிறார்கள்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *