கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளா? கிளிம்ப்ஸா?… படக்குழுவினர் வைத்துள்ள சர்ப்பிரைஸ் எலிமெண்ட்!!

கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஃபர்ஸ்ட் சிங்கிளா? கிளிம்ப்ஸா?… படக்குழுவினர் வைத்துள்ள சர்ப்பிரைஸ் எலிமெண்ட்!!

நவம்பர் 7-ஆம் தேதி கமல்ஹாசன் தனது 67-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். கடந்த வருட பிறந்தநாளின்போது கமல்ஹாசன் லோகேஷ் கனகராஜ் இணையும் ‘விக்ரம்’ படத்தின் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இத்திரைப்படத்தில் கமல்ஹாசனுடன் விஜய் சேதுபதி, ஃபகத் ஃபாசில், காளிதாஸ் ஜெயராம், நரேன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். கடந்த ஜூலை மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது. இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்து இரண்டு வாரங்கள் படக்குழுவிற்கு பிரேக் விடப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் சென்னை தாம்பரத்தில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

இந்த நிலையில், தாம்பரம் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதால் கமல்ஹாசனின் பிறந்தநாளை சில நாட்களுக்கு முன்னர் படக்குழு ‘ஹேப்பி பர்த்டே லீடர்’ என்ற கேக்குடன் கமல்ஹாசன் புகைப்படம் இடம்பெற்றிருக்கும் கேக்கை வெட்டி பிறந்தநாளைக் கொண்டாடியது.

இந்நிலையில் நவம்பர் 7ம் தேதி கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ‘பத்தல பத்தல’ன்னு உருவாகியுள்ள ஃபர்ஸ்ட் சிங்கிள் அல்லது கிளிம்ப்ஸ் வெளியிடப்படும் எனத் தெரிய வந்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *