புதிய படம் இயக்கத் தயாராகும் ஹிப்ஹாப் ஆதி

புதிய படம் இயக்கத் தயாராகும் ஹிப்ஹாப் ஆதி
ஹிப்ஹாப் ஆதி ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார்.

புதிய படம் ஒன்றை இயக்கத் தயாராகியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப் ஹாப் ஆதி.
பாடகர், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஆம்பள, தனி ஒருவன், அரண்மனை 2, கதகளி, கத்தி சண்டை, இமைக்கா நொடிகள், கோமாளி, ஆக்ஷன் உள்பட ஏராளமான படங்களுக்கு இசைமைத்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் பட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

மீசையை முறுக்கு என்ற படத்தை இயக்கி கதாநாயகனாகவும் அறிமுகமானார். தொடர்ந்து நட்பே துணை, நான் சிரித்தால் ஆகிய படங்களிலும் கதாநாயகனாக நடித்து புகழ் பெற்றார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் மீண்டும் ஒரு படத்தை இயக்கி கதாநாயகனாக நடிக்க ஹிப்ஹாப் முடிவு செய்துள்ளார்.
படத்தின் பெயர் மற்றும் இதர நடிகர், நடிகைகள் விவரம் விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் பட அறிவிப்பு வெளியாகவுள்ளதாம்.

administrator

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *