பிரபல நடிகரின் தந்தையை சுட்ட ரவுடியைப் பிடித்த போலீஸார்.

பிரபல இந்தி நடிகர் ஹிருத்திக் ரோசனின் தந்தையும் தயாரிப்பாளருமான ராகேஷ் ரோஷனைத் துப்பாக்கியால் சுட்டுவிட்ட நபர் பரோலில் வெளியே வந்த நிலையில் தப்பி ஓடினர். குற்றவாளியைப் போலீஸார் வலைவீசித் தேதி வந்த நிலையில் தற்போது கைது செய்துள்ளனர்.
தூம் 2, ஜோதா அக்பர் போன்ற படங்களில் நடித்தவர் நடிகர் ஹிருந்த்திக் ரோஷன். இவரது தந்தை ராகேஷ் ரோஷனை கடந்த 2000 ஆம் ஆண்டு சில மர்ம நர்களை துப்பாக்கியால் சுட்டனர்.
அவரைக் கொல்ல முயன்றாக கைதுசெய்யப்பட்ட பிரபல ரவுடி சுனில் கைக்வாட் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் ரவுடிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அவர் பரோலில் வெளியே வந்தபோது தப்பி ஓடினார். அவரைத் தேடி வந்த போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர்.




