ஜூனோ திரைப்படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட, பிரபல ஹாலிவுட் நடிகை எலன் பேஜ், தன்னை திருநம்பியாக அறிவித்துள்ளார்.
கனடாவைச் சேர்ந்த எலன் பேஜ், ஜூனோ, எக்ஸ்-மேன், இன்செப்சன், டூ ரோம் வித் லவ் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014ம் ஆண்டு தன்னை ஓரினச் சேர்க்கையாளராக அடையாளப்படுத்திக் கொண்ட எலன், எம்மா என்ற பெண்ணை மணந்து வாழ்ந்து வருகிறார். இதனிடைய, ஓரினச் சேர்க்கையாளர்கள் சமூகத்துடன் இணைந்து அவர்களின் உரிமைகளுக்காகவும் அவர் குரல் கொடுத்து வந்தார்.
இந்நிலையில், அறுவை சிகிச்சை மூலம் தான் திருநம்பியாக மாறிவிட்டதாகவும், தனது பெயரை எலியட் பேஜ் என்று மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.
இதுதொடர்பான அவரது டிவிட்டர் பதிவில், இப்போது என் பெயர் எலியட் பேஜ் அல்ல, எலன் பேஜ். நீங்கள் என்னை ஒரு பெண் அல்லது ஆண் என்று அழைத்தாலும் பரவாயில்லை. நான் செய்ய விரும்பியதைச் செய்தேன் என குறிப்பிட்டுள்ளார்.
https://twitter.com/TheElliotPage/status/1333820783655837701?s=19
நான் திருநம்பியாக மாற முடிவு செய்தேன். இந்த முடிவை சிலர் விரும்புவதில்லை. பலரும் என்னை விமர்சித்தனர். ஆனாலும், நான் செய்ய விரும்பியதைச் செய்தேன். ஹாலிவுட் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராவான எலன் பேஜின் முடிவிற்கு, ஹுஜ் ஜாக்மேன் உள்ளிட்ட பல நடிகர்களும் ஆதரவு தெரிவித்து உள்ளனர்.