Loveஐ கியூட்டாக புரொபோஸ் செய்த பாவனி

Loveஐ கியூட்டாக புரொபோஸ் செய்த பாவனி

அமீரின் காதலை ஏற்றுக்கொள்வதாக பாவனி தெரிவித்துள்ளார்.

விஜய்டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் அமீர்-பாவனி ஜோடி மிகவும் பிரபலம். நிகழ்ச்சியின் போது அமீர் பாவனியிடம் தனது காதலை வெளிப்படுத்தி கொண்டே இருந்தார். ஆனால், அதற்கு பாவனி ஒப்புக்கொள்ளவில்லை. பிக்பாஸில் அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டது. இந்த நிலையில், நேற்று பிக்பாஸ் ஜோடிகளின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் அமீர், பாவனியை வெற்றியாளர்களாக அறிவித்தனர். இதையடுத்து இன்ஸ்டாகிராமில் அமீர் மீதான தனது காதலை பாவனி மிக அழகாக கூறியிருக்கிறார்.

அதாவது, “நடனம் எனக்கு மிகவும் சவாலான விசயம். அதுவும் போட்டியில் கலந்துகொள்வது என்பது பயம் அளிக்கக்கூடியது. ஆனால், நீங்கள் சிறந்த மாஸ்டர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். நடனமாட தெரியாதவரை நடனமாட வைத்து வெற்றிப்பெறச் செய்வது எப்படி என உங்களுக்குத் தெரியும். உங்களை பற்றி அதிகம் தெரிந்து கொண்டேன். நீங்கள் மனதளவில் மிக அழகான மனிதர். நீங்கள் சிறந்த மாஸ்டர்.நீங்கள் சிறந்த நண்பர். இப்பொழுது வாழ்க்கை பயணத்தை ஒன்றாக துவங்கலாமா? என் வாழ்க்கைத் துணையாக இருங்கள்.எப்பொழுதும் நீங்கள் எனக்காகத்தான். நான் உங்களை காதலிக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *