திருமணம் செய்யாமலேயே தாயாகலாம்… பிரபல நடிகை ஓபன் டாக்

திருமணம் செய்யாமலேயே தாயாகலாம்… பிரபல நடிகை ஓபன் டாக்

தாயாக வேண்டுமென்றால் திருமணம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று நடிகை தபு தெரிவித்துள்ளார்.

AndhaDhun Actress Tabu: "For Me, It Was Always Important To Focus On Work  Rather Than On How Famous I Am"

தமிழில் காதல்தேசம், இருவர், தாயின் மணிக்கொடி, கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் தபு (50).இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. இந்த நிலையில், இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது: எனக்கும் எல்லோரையும் போல தாயாக வேண்டும் என்ற ஆசை உள்ளது. அதற்கு திருமணம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. திருமணம் ஆகமலேயே கர்ப்பம் ஆகலாம்.

அதாவது வாடகைத்தாய் (சரகோசி) மூலமாக தாயாகும் வாய்ப்பு உள்ளது. எனக்கு தாயாக வேண்டும் என தோன்றினால் நான் அந்த முறையைதான் கடைபிடிப்பேன். என்னை யாராலும் தடுக்க முடியாது என்றார். மேலும் பேசிய அவர், திருமணம் ஆகாவிட்டால் செத்துப் போக மாட்டோம். திருமணம் அவசியம் இல்லை. தற்போது எனது நடிப்புத் தொழிலில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவித்து வருகிறேன். காதலுக்கும், திருமணத்திற்கும், வயதிற்கும் சம்மந்தம் இல்லை. இந்த காலத்தில் எதற்கும் வயது ஒரு தடையல்ல  என்று தெரிவித்தார்.

author

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *